திருப்பாவையில் ஆறாவது பாசுரம் முதல் பதினைந்தாவது பாசுரம் வரை,பத்து தோழியர்களைப் பாவை நோன்புக்காக ஆண்டாள் எழுப்புவதாக அமைந்துள்ள பாசுரங்கள்.
திருப்பாவையின் உள் அர்த்தம் ( ஸ்வாபதேசம்) கொண்டு பார்க்கும் பொழுது,பத்து ஆழ்வார்களைத் துயில் எழுப்புவதாக அமைந்துள்ளது என்பது நமது வைணவ ஆசாரியர்களின் கருத்து.
எழுப்புவது என்பது உறங்கும் நிலையிலிருந்து, விழித்துக் கொள்ளும் வெளிப்பாடு. உறங்கும் நிலை என்பது மந்தமான, இயக்கமற்ற நிலை. எழுப்புவது என்பது இயக்கத்தை உருவாக்கும் நிலை. அதாவது இயக்கத்தை ஊக்குவிக்கும் (Motivation) நிலை.
தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது,பல காரணங்களினால் பணித்தொய்வு ஏற்படுவது என்பது இயற்கையான செயல். அப்பொழுது குழுத்தலைவன் ஊக்குவிக்கும் வார்த்தைகளைச் சொல்லி,உற்சாகப் படுத்தவேண்டும். உற்சாக மனப்பான்மை ஒன்றே, பணித்திட்டமிட்டப்படி சரியாக முடிப்பதற்கான சாதனம். இதைத்தான் ஆண்டாள், தொடர்ந்து 10 பாசுரங்களின் மூலம் தோழியர்களை எழுப்பி உற்சாகம் ஊட்டுவதாக அமைத்துள்ளாள்
சுந்தர காண்டத்தில் , ஸர்க்கம் 12 ல், அனுமன் இலங்கை முழுவதும் தேடி, சீதையைக் காணவில்லை என்றவுடன் மனம் தளர்ந்து காணப்படுவதாகவும், மீண்டும் ராமநாமத்தால் தன்னைத்தானே உற்சாகப்படுத்திக் கொண்டு (Self Motivation), எடுத்துக் கொண்ட காரியத்தை (அதாவது சீதையைக் கண்டுபிடிக்கும்) நிறைவேற்றுவதற்காகத் திட்டங்களைத் தீட்டி செயல் படுத்த ஆரம்பிக்கிறார், என்று உற்சாகத்தின் மூலம் காரியம் நிறைவேறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தன்னைத்தானே ஊக்குவித்துக் கொள்வது(Self Motivation), உற்சாகப்படுத்திக் கொள்வது என்பது மிகப்பெரிய சாதனம், வெற்றி அடைவதற்கான பல வழிகளில் இதுவே சாலச்சிறந்தது. ஆனால் தன்னைத்தானே ஊக்குவித்துக் கொள்வது என்பது மிகவும் கடினமான செயல்,அதற்கான தகுந்த பயிற்சிகள், நேர்மறை எண்ணங்கள் நிறைந்த நிலைப்பாடு தேவை.
இல்லையென்றால் பிறர் உதவிக்கொண்டு, ஊக்குவித்து , உற்சாகப்படுத்தி, நேர்மறை எண்ணங்களை வித்திட்டு, எடுத்துக்கொண்ட காரியத்தை முடிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கவேண்டும். பெரும்பாலும் இந்த வழிமுறைகளைப் பல பெரும் நிறுவனங்களும், தனிப்பட்ட மனிதர்களும் நடைமுறையில் செயல்படுத்தி வருகின்றனர்.
ஒரு காரியத்தைச் செய்து முடிப்பதற்காக, ஒருவரை ஊக்குவிக்கும் பொழுது, காரியம் முடிப்பதற்கான அறிகுறிகளின் அடையாளங்களைச் சொல்லி,முடிப்பதனால் விளையும் பயனையும் சேர்த்துச் சொல்லி,குழும உறுப்பினர்களைத் தனிப்பட்ட முறையில் உற்சாகப் படுத்துவதன் மூலம் வெற்றியடைய முடியும் என்பது நவீன மேலாண்மைப் பாடம்
As per modern Management, Defination of Motivation is the process of stimulating people to actions to accomplish the goals.
இந்த ஊக்குவிக்கும் நுணுக்கங்களை (Motivation Tips) ஆண்டாள், தனது திருப்பாவையில் எவ்வாறு கையாண்டுள்ளாள் என்பதனை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
(தொடரும்)
முந்தைய பதிவுகள்:













