அனைத்து நிகழ்ச்சிகளிலும்,நிகழ்ச்சி தொடங்கும் முன், செய்யக்கூடிய செய்யக்கூடாத விடயங்களை விதியாக (Do’s and Don’ts) அறிவிப்பார்கள். பொதுவாக இப்பொழுது நிகழ்ச்சியில், சப்தம் எழுப்பாதீர்கள், அலைப்பேசி சப்தமில்லாமல் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது அணைத்து விடுங்கள், குழந்தைகளைச் சப்தமில்லாமல் இருக்கச் செய்யுங்கள் என்று தவிர்க்கும் பட்டியல் வாசிக்கப் படுகிறது.
விமானப் பயணத்திற்கு முன் கைப்பையில் எடுத்துச் செல்ல தவிர்க்கும் பட்டியல் ஒன்றை வெளியிடுகிறார்கள். அனைத்து விளையாட்டுப் போட்டியிலும் என்ன செய்யக்கூடாது, என்ன செய்யவேண்டும் என்ற பட்டியலை முன்பாக வெளியிடுகிறார்கள்.
கொடுக்கப்பட்ட பணிகளை செம்மையாகச் செய்வதற்கு, செய்யத் தகுந்த, செய்யத்தகாத விதிமுறைகள் மிகவும் முக்கியம். இலக்கை நோக்கிச் செல்வதற்கும், இலக்கை எளிதில் அடைந்து வெற்றி காண்பதற்கும் இந்த விதிமுறைகளை முதலில் தெரிந்து கொண்டு பணிகளை(அ) ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.
ஆண்டாள் நாச்சியார் தனது இரண்டாவது பாசுரத்தில், நீராட்டம் என்ற பாவை நோன்பிக்கான விதிமுறைகளை, தனது குழும உறுப்பினர்களுக்கு அறிவிக்கும் பாசுரமாக அமைந்துள்ளது.
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!
நாமும் நம் பாவைக்கு – Addressing to team members as leader
செய்யும் கிரிசைகள் கேளீரோ – Team leader insisting listening skills
பாவை நோன்பு விதிகள்:
1. நெய் உண்ண மாட்டோம்
2. பால் உண்ண மாட்டோம்
3. கண்ணுக்கு மை தீட்ட மாட்டோம் ( அலங்காரம் செய்ய மாட்டோம்)
4. மலர் சூட மாட்டோம்
5. செய்யக்கூடாததைச் செய்ய மாட்டோம்
6. பொய், கோள் சொல்ல மாட்டோம்
7. நாள்தோறும் நீராடுவோம்
8. ஐயம் – நாடிச் சென்று கேட்காமல் உதவி செய்வோம்
9. பிச்சை – கேட்பவர்களுக்கும் உதவி செய்வோம்
10. ஆந்தனையும் கை காட்டி – முடிந்த அளவு உதவி செய்தல்
செய்யக் கூடியவை ஐந்து என்றும், செய்யக் கூடாதவை ஐந்தும் என்றும் பட்டியலிட்டுக் காண்பித்துள்ளாள்.
இந்தப் பாடலைக் கூர்ந்து கவனிக்கும் பட்சத்தில் ஒரு சிறப்பு அம்சம் மற்றும் நிர்வாகத்திறன் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான விடயம் புலப்படும். பாடலை ஆண்டாள் பன்மைத் தன்மையில் அமைத்துள்ளாள். நாமும் நம் பாவைக்கு என்று சொல்லும் பொழுது, விதிமுறைகள் என்பது குழுமத்தில் உள்ள அனைவருக்கும் பொது என்று அழுத்தமாக அறிவித்துள்ளாள்.
பால் உண்ணோம், நெய் உண்ணோம், மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம் என்ற சப்த பிரயோகங்கள் உணர்த்துவது என்னவென்றால், குழுமத் தலைவனும் (Team leader) குழும உறுப்பினர்களுடன் சேர்ந்து விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற முக்கியமான நிர்வாகப் பாடத்தை ஆண்டாள் நாச்சியார் அமைத்துள்ளது என்பது அவளின் அறிவின் கூர்மைக்கு இலக்கணமாக அமைந்துள்ளது.
இங்கே ஆண்டாள் நாச்சியார், தலைவனின் குணங்கள் (Leadership Quality), தலைவனின் பொறுப்புக்கூறல் (Leadership accountability) மற்றும் தலைவனின் நெறிமுறைகளை (Leadership Ethics) என்ற உயர்ந்த நிர்வாகப் பாடத்தை இந்தப் பாடலில் காண்பித்துள்ளாள். Even Modern Management insists more leadership quality than Manager quality in industries. Leaders must set examples to team members.
இந்த பாசுரத்தில் ஆண்டாள் நாச்சியார், குழுமப் பணியில் குழுமத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ( Team Work Qualities) எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற உன்னத நிர்வாகத்திறன் சூட்சுமத்தை (Management Tips) அழகாகக் கூறியிருக்கிறாள்.
“ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி” என்ற பாசுரத்தின் வரிகளைக் கூர்ந்து கவனிக்கும் நேரத்தில் நிர்வாகத்திறன் சூட்சுமம் வெளிப்படும். இந்த சூட்சுமம்(Tips), குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குப் பொதுவாகக் கூறியிருப்பதன் மூலம் தலைவனின் குணத்தை( Leadership Quality) மீண்டும் வலியுறுத்திகிறாள்.
கேட்காமல் உதவிகளைச் செய்யவேண்டும் (ஐயம்) (Voluntary service) என்று முதலில் வைத்து, பிறகு குழுமத்தில் கேட்பவர்களுக்குக் கண்டிப்பாக உதவிகளைச் செய்யவேண்டும் (பிச்சை) ( Service When demanded) என்றும், முடிந்த அளவு ( ஆந்தனையும்) (Service Without Border Limit) உதவிகளை மேற்கூறிய இரண்டுக் காலகட்டத்திலும்( ஐயம், பிச்சை) செய்யவேண்டும் என்றும், விதிமுறைகளைக் குழுமத்துக்குக் கூறியிருப்பதன் மூலம் ஆண்டாளின் நிர்வாகத்திறன் நுணுக்கம் புலப்படுகிறது.
இரண்டாவது பாசுரத்தின் மூலம், இலக்கை அடைவதற்கான விதிமுறைகள் (Rules to achieve goals), தலைமைப் பண்புகள் (அ) குணங்கள் (Leadership quality), தலைமையின் பொறுப்புக்கூறல் (Leadership accountability), தலைவனுக்கான நெறிமுறை (Leadership ethics), குழுப்பணிக்கானக் குணங்கள் (Team work qualities), குழுமப்பணி முறைகளும் அவற்றைச் செயலாற்றும் முறைகளையும் மற்றும் நிர்வாகத்திறன் நுணுக்கங்களையும் (How to offer the services in Team and Management tips) ஆண்டாள் நாச்சியார் தெரிவித்துள்ளாள்.

முந்தைய பதிவுகள்:

மிகவும் அருமை