குழுமத் தலைவன், மாசுகளற்ற, கள்ளகபடமற்ற,பராபட்சம் இல்லாத தூய மனது படைத்தவனாக இருக்கவேண்டும்.
திருப்பாவை ஐந்தாம் பாசுரத்தில், மேலாண்மையின் உன்னதமான நெறியை உணர்த்த வந்த அருமையான பாசுரம். நவீன நிர்வாகம், தலைமையத்துவம் காட்டும் நெறிமுறைகள் (Leadership Ethics) என்று, நீண்ட பயிற்சிகள் தொடர்ந்து பெருநிறுவனங்களில் கொடுத்து வருகின்றன.
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.
தலைமையகத்தின் தலைசிறந்த பண்புகளில் ஒன்று, பராபட்சம் காட்டாமல் நடுநிலையுடன் ( Impartial and neutral act) இருக்கவேண்டும். இந்தப் பண்பினை ஆண்டாள் இந்த பாசுரத்தில் “ “தூயோமாய் வந்து நாம்” என்று கூறியதன் மூலம், எந்த ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன் “ பராபட்சமில்லாத நடுநிலை” வேண்டும் என்று வலியுறுத்துகிறாள்.
குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மனம், வாக்கு, செயல் என்ற முக்கரணங்களும் ஒரேநிலைப்பாட்டில் இருக்கவேண்டும் என்பதை, Leadership Ethics Demonstration என்ற தலைப்பில் பெருநிறுவனங்களில் பாடங்கள் எடுக்கிறார்கள். தலைமை நிர்வாகத்தின் எண்ணங்களைச் சொல்வதோடு மட்டுமல்லாமல், நடைமுறைப்படுத்தி தளத்தில் செய்துக் காண்பிக்க வேண்டும் என்று நவீன மேலாண்மை வலியுறுத்துகிறது. இந்த பண்புகளை ஆண்டாள், தூமலர் தூவி தொழுது ( Action, Implementing practically on shop floor), வாயினால் பாடி ( Explaining management thoughts) , மனத்தினால் சிந்திக்க ( Documenting the thought process).
நவீன நிர்வாகம், ஒவ்வொரு பணிக்கும் ஒரு நிலையான இயக்க நடைமுறைகள் (Standard Operating Procedures – SOP) தயாரிக்க வேண்டும் என்றும் ( Documenting the thought process i.e SOP), அதனை உறுப்பினர்களிடம் விளக்கவேண்டும் என்றும் ( Explaing SOP to Team members) , பிறகு அதனை பணித்தளத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ( Testing the SOP on Shop Floor) வலியுறுத்துகிறது. இதனை ஆண்டாள் முக்கரணங்கள் மூலம், இந்த பாசுரத்தில் தெரிவித்துள்ளாள்.
கவிதையில் காட்சி படுத்துவதில் ஆண்டாள் மிகவும் கை தேர்ந்தவள் என்று முதல் ஐந்து பாசுரங்கள் தெள்ளத் தெளிவாகக் காட்டிக் கொடுக்கின்றன. மேலும் திருப்பாவையின் அனைத்துப் பாசுரங்களும் நிகழ்ச்சியைக் காட்சிபடுத்தும் வண்ணம் அமைந்துள்ளது என்பது இந்தப் பிரபந்தத்தின் ஏற்றம்.
திருப்பாவையை “ சித்திர வடிவத்தில்” (Visual Management ) கொண்டு வந்துள்ளனர் என்பதன் மூலம், காட்சியமைக்கப் படும் தன்மையை எளிதில் புரிந்துக் கொள்ளமுடியும். அதற்கு சித்திரதிருப்பாவை என்று பெயர்சூட்டி அழைத்தனர்.
நிலையான இயக்க நடைமுறைகள் (SOP) எழுதும் பொழுது, படங்களுடன்( Visual Management) விளக்கினால் எளிதில் புரிந்துக் கொள்ளமுடியும் என்பதை நவீன மேலாண்மை பாடங்கள் கூறுகின்றன. அதையே சித்திர திருப்பாவை எடுத்துக் காட்டுகிறது. (One picture explains 1000 words)
தலைமையத்துவ நெறிமுறைகளில் (Leadership Ethics) ஒன்று, தவறு செய்தவர்கள் தவற்றை உணர்ந்து, சரணடையும் நேரத்தில் அனைத்துத் தவற்றையும் மன்னித்து ஏற்றுக் கொள்வது என்பது தலையாய நவீன மேலாண்மைப் பாடமாக உள்ளது. அறிவுப் பூர்வமாக (IQ) நகருவதை விட , உணர்வு பூர்வமாக(EQ)நகர்ந்து முடிவு எடுக்கவேண்டும் என்று நவீன மேலாண்மைப் பாடம் இன்று வலியுறுத்துகிறது. குழுத் தலைமைக்கு அறிவுசார் நுண்ணறிவை விட ( Intellectual Intelligence) உணர்வுசார் நுண்ணறிவு(Emotional Intelligence) அதிகமாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது. மன்னிப்பு என்பது உணர்வுசார் விஷயமாகப் பார்க்ப்படுகிறது. இந்த தன்மையை “ போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் “ என்று, பிழைகள் அனைத்தும் தீயினில் விழுந்த தூசு போல் என்ற மன்னித்து அருளும் குணத்தை எடுத்துக் காட்டியுள்ளாள்.
அப்படிப்பட்ட குழுமத் தலைவன், மாசுகளற்ற, கள்ளகபடமற்ற,பராபட்சம் இல்லாத தூய மனது படைத்தவனாக இருக்கவேண்டும். அத்தகைய தூயகுணம் கொண்டவனால்“மன்னித்து ஏற்றுக் கொள்ளமுடியும் “ . இந்த பாசுரத்தில் இந்த தூய குணம் “ தூயபெருநீர் யமுனைத்துறைவன்” என்று அழகாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறாக இந்த பாசுரத்தில், தலைமையத்துவ நெறிமுறைகள் (Leadership Ethics), நெறிமுறைகளை நடைபடுத்தல் (Demonstration of Leadership Ethics), நிலையான இயக்க நடைமுறைகள் தயாரிப்பு மற்றும் நடைமுறைபடுத்தல் (Documenting standard operating procedures and implementing on shop floor), நெறிமுறைகளைக் காட்சிபடுத்தல்(Visual Management), உணர்வுசார் நுண்ணறிவு( Emotional Intelligence) போன்ற நவீன மேலாண்மைப் பாடங்களை ஆண்டாள் நாச்சியார் அழகாக விளக்கியுள்ளாள்.
(தொடரும்)
முந்தையப் பதிவுகள்:














Great excellent and really a new dimension of thoughts.