ஆண்டாள் திருப்பாவையின் முதல் பாசுரத்தில் “ ஒரு கூட்டத்தை எப்படி நடத்த வேண்டும் (How to Conduct meeting), கூட்டத்திற்குத் தேவையான திட்டவரைவு ( Agenda of meeting), கூட்டத்திற்கான சரியான நபர்களை தேர்ந்தெடுத்து மற்றும் அழைப்பு விடுத்தல் (Select and send meeting request to selective suitable participants), குழுமம் அமைத்துக் குழுமப் பணி தீர்மானம் முடிவு செய்தல் ( Formation of Team and Decide about Teamwork activities), பணி மற்றும் பணிக்குழு அமைத்தல்(Formation of Task and Task force), கூட்டு முடிவு எடுத்தல் மற்றும் மதித்தல் ( Taking and Respecting the collective decision), தகவல் தெரிவிக்கும் தன்மை ( Effective Communication Skill) போன்ற நவீன மேலாண்மைப் பாடங்களை அமைத்துள்ளாள் என்பதனை இரண்டாம் பாகத்தில் பார்த்தோம்.
இரண்டாவது பாசுரத்தில், இலக்கை அடைவதற்கான வழிமுறைகள் (Rules to achieve Goals), செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத விதிமுறைகள் அறிவித்தல் ( Inform team members about Do’s and Don’ts rules), தலைமைப் பண்புகள் ( Leadership Quality), தலைமையின் பொறுப்புக்கூறல் (Leadership Accountability) மற்றும் தலைமைக்கான நெறிமுறை (Leadership Ethics), குழுமப்பணி குணங்கள் (Teamwork Qualities), குழுமப் பணியில் செயலாற்றும் விதம் ( Way to act in teamwork), மேலாண்மை நுணுக்கங்கள் (Management Tips) போன்ற பாடங்களை அமைத்துள்ளாள் என்பதனை மூன்றாவது பாகத்தில் பார்த்தோம்.
மூன்றாவது பாசுரத்தில், திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதியின் அவசியத்தையும், அள்ள அள்ளக் குறைவில்லாதச் செல்வம் வேண்டும் என்றும் ( Resources without shortage), பெரிய திட்டங்களைப் பலபல சிறுசிறு திட்டங்களாக எளிதில் முடிக்கும் அளவில் பிரித்து, முழுத் திட்டங்களையும் சரிவர முடிக்கவேண்டும் என்ற மேலாண்மை நுணுக்கங்களைத் தெரிவித்தும் (Divide the main task into many manageable small tasks), சமச்சீரான வேலைப்பளு (Uniform distribution of workload), தொடர்ந்து செயல்படுத்தல் (Sustainability of Work), பணியின் தரத்தன்மை (Quality of work), செம்மையான மற்றும் வளமையான பொருளை உருவாக்குதல் (Refined and Prosperous output product), மனமகிழ்ச்சி மற்றும் மன அமைதி ( Self satisfaction) போன்ற மேலாண்மைப் பாடங்கள் அமைத்துள்ளாள் என்பதனை நான்காவது பாகத்தில் பார்த்தோம்.
நான்காவது பாசுரத்தில், தொடர்ந்து ஆழ்ந்து தொழில்நுட்ப கல்விகற்றல் மற்றும் பயிற்சி பெறுதல் ( Optimisting the Technical Knowledge and Practice), கற்ற மற்றும் பயிற்சி பெற்ற அறிவுத்திறனை முழுமையாகப் பயன்படுத்தல் (Maximise the utilization of knowledge), அறிவுத்திறனைக் கொண்டு நன்றாக வாழமுடியும் (Sound knowledge will lead good life) போன்ற பாடங்களை அமைத்துள்ளாள் என்பதனை ஐந்தாவது பாகத்தில் பார்த்தோம்.
ஐந்தாவது பாசுரத்தில், தலைமைத்துவ நெறிமுறைகள் (Leadership Ethics), நெறிமுறைகள் நடைபடுத்தல் (Demonstration of leadership ethics), நிலையான இயக்க நடைமுறைகள் தயாரிப்பு மற்றும் நடைமுறைப்படுத்தல் (Documenting standard operating procedures and implementing on shop floor), நெறிமுறைகளைக் காட்சிப்படுத்தல் (Visual Management), உணர்வு சார் நுண்ணறிவு (Emotional Intelligence) போன்ற நவீன மேலாண்மைப் பாடங்களை ஆண்டாள் நாச்சியார் அமைத்துள்ளாள் என்பதனை ஆறாவது பாகத்தில் பார்த்தோம்.
இந்த ஐந்து பாசுரங்களும் திருப்பாவை அவதாரிகை (முன்னுரை) பாசுரங்கள் என்பார்கள். இந்த ஐந்து பாசுரங்களின் மூலம் மேற்கூறிய நவீன மேலாண்மைப் பாடங்களை அமைத்து, அடுத்த பத்து பாசுரங்களில் தனது தோழியர்களை எழுப்பி, எடுத்துக் கொண்ட காரியம் நீராட்டத்தில் (கிருஷ்ண அனுபவம்) சரிவரப் பங்கு கொண்டு பயனை அடைய அழைப்புவிடும் பாசுரங்களாக அமைத்துள்ளாள்
இந்த பத்து பாசுரங்களில் தோழியர்களைத் துயில் எழுப்புவதாக, அதாவது ஊக்கத்தைத் தருவதாக (Motivate Team Members) அமைத்துள்ளாள். ஊக்கம் , உற்சாகம் என்பது மனிதர்களைத் தொடர்ந்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பது நவீன மேலாண்மைப் பாடம். அடுத்த பாகத்தில் இதன் விளக்கத்தை விரிவாகப் பார்ப்போம்
(தொடரும்)
முந்தையப் பதிவுகள்:















Great analysis and explanation
முதல் 5 பாசுரங்களின் மேலாண்மை சார்ந்த சாரமான கருத்துக்களை மீண்டும் ஒரு முறை நினையுறுத்தியதற்கு நன்றிகள். மேற்கொண்டு வரும் பாசுரங்களில் ஆண்டாள் எவ்வாறு நவீன மேலாண்மையை பிரதிபலிக்க போகிறாள் என்பதை அறியவும் அதனை ஆசிரியர் எவ்வாறு தனது நடையில் தரப்போகிறார் என்பதை எதிர்பார்த்து காத்துள்ளோம்