சமச்சீரான வேலைப் பளு உருவாக்குதல்
ஒரு நிகழ்ச்சி இனிதே நடைபெறுவதற்காகச் சந்திப்பு
( Meeting) ஏற்பாடு செய்து, சந்திப்பில் குழுப்பணி உருவாக்கி, குழு தலைவர் குழு உறுப்பினர்களை முடிவு செய்து, அடைய வேண்டிய இலக்கு என்பதையும் தீர்மானித்து, இலக்கை அடைவதற்கான விதிமுறைகளையும் குழும உறுப்பினர்களுக்கு அறிவித்து, குழுமப் பணியில் தலைவன் மற்றும் உறுப்பினர்கள் எவ்வாறெல்லாம் பங்கேற்று தங்களது சேவைகளைச் செய்ய வேண்டும் என்ற நிர்வாகத் திறன் பாடங்கள் திருப்பாவையில் அமைந்துள்ளது என்பதனை முன் பதிவில் பார்த்தோம்.
இப்பொழுது மூன்றாவது பாசுரத்தில், ஆண்டாள் நாச்சியார் காட்டும் நிர்வாகத்திறனைப் பார்ப்போம்.
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்
ஒரு நிகழ்ச்சியை இனிதே நிறைவேற்ற முக்கியமாகப் பணம் வேண்டும். அதையே இந்தப் பாசுரத்தில் “ நீங்காத செல்வம் “ வேண்டும் என்று பிரார்த்திக்கிறாள். “ வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்” என்று நீங்காத செல்வம், அள்ள அள்ளக் குறைவில்லாத வேண்டிய செல்வம், தான் எடுத்துக் கொண்ட காரியத்தை (Task) நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கும் பாசுரம்.
In modern Management, MainTask must be divided into multiple small tasks . If all these small tasks are completed, then the whole project successfully will be completed.
கொடுக்கப்பட்ட பணியைப் பல சிறு சிறு பணிகளாகப் பிரிக்கவேண்டும், இந்தச் சிறிய பணிகள் அனைத்தும் முடிந்தால், முழு திட்டமும் வெற்றிகரமாக முடிக்கப்படும் என்பது நவீன நிர்வாகப் பாடம்.
இந்தப் பாசுரத்தில் “ ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி “ என்று குறுகிய வாமன அவதாரத்தைச் சொல்லி, திரிவிக்கிரமனாக இந்த உலகத்தை அளந்து, எடுத்துக் கொண்ட அவதாரத்தின் செயல்களைச் செவ்வனச் செய்து, திட்டத்தை வெற்றிகரமாக முடித்தான் என்பது வாமன திரிவிக்கிரம அவதார ரகசியம். சிறு சிறு பணிகள் என்பது எளிதில் முடியக் கூடியவை, அதையே வாமன அவதாரமாகக் காட்டினான் பரம்பொருள்.
சிறு பணிகள் முழுவதும் முடிக்கும் பொழுது பெரிய திட்டம் இறுதியில் வெற்றிகரமாக முடிக்கப்படும் என்பதை, சிறு உருவத்திலிருந்து பெரிய உருவகமாக வளர்ந்து திட்டத்தை நிறைவேற்றியதை,வாமன திரிவிக்கிரம அவதாரம் காட்டும் உண்மை.
தொடர்ந்து சீராகக் குறையில்லாமல் ஒரு காரியத்தைச் செய்யும் பொழுது, வேலைப் பளு என்பது சமச்சீராக இருக்கும். இதை நவீன நிர்வாகம் “ Uniform Distribution of Workload” என்று கூறுகிறது. வேலைப் பளுச் சமச்சீராக இருக்கும் பட்சத்தில், அவ்வாறுத் தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் (Sustainbility of work), தரம் வாய்ந்த ஒரு பொருள் கிடைக்கப்பெறும்(Quality of Work) என்பது நவீன நிர்வாகப் பாடம்.
இந்த மூன்று நிர்வாகத் திறனைக் கொண்டு ஒரு காரியத்தைச் செய்து முடிக்கும் பொழுது , அந்த காரியம் செம்மையாகவும் வளமையாகவும் ( Refined and prosperous output) இருக்கும். மனத் திருப்தி மற்றும் மகிழ்ச்சி உண்டாகும் (Self satisfaction and joyful).
ஆண்டாள் நாச்சியார் இந்தப் பாசுரத்தில் “ தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து “ என்று கூறியதன் மூலம் தொடர்ந்து சீராகப் பெய்யும் மழையை ( Uniform distribution of load and Sustainability) குறிப்பிட்டு, தண்ணீர் இல்லாத குறை நீங்கும் (Quality of Work) என்று குறிப்பிடுகிறாள்.
“ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள” குறைவில்லாத நீரினால் பயிர்கள் ஓங்கி வளர்ந்துள்ளது ( Refined and prosperous product) என்றும், கயல் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன ( Satisfaction and Joyful) என்று ஆண்டாள் நிர்வாகத்திறன் நன்மைகளை இங்குப் பட்டியலிட்டுக் காண்பித்துள்ளாள்.
“பூங்குவளைப் போதில் பொறிவன்று கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி” – பொறிவண்டு பூவின் தேனை உண்டு அயர்ந்து கண் உறங்குவதைக் கூறியதன் மூலம், ஆனந்தக் களிப்பையும் சுட்டிக் காட்டும் வகையில் அமைந்துள்ளதை பார்க்கும் பொழுது ஆச்சரியமாக உள்ளது.
கண் அயர்ந்து தூங்குவதன் மூலம்மனஅமைதி ஏற்படும் என்பது நாம் அறிந்த உண்மை. ஒவ்வொரு திட்டங்களும் சரிவரக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கும் பொழுது, அனைத்து குழும. உறுப்பினர்களும் மனநிறைவு (அ) மன அமைதி, மகிழ்ச்சி ஏற்படும்.
ஆண்டாள் நாச்சியார் இந்த பாசுரத்தின் மூலம், Resource management(நீங்காத செல்வம்), Divide the main task into easily manageable small task(ஓங்கி உலகளந்த , வாமன அவதாரம் தொடங்கி திரு விக்ரம அவதாரம்) , uniform distribution of load, Sustainability of work, Quality of work(தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து), Refined and prosperous output(ஓங்கு பெருஞ்செந்நெல்), Mind satisfaction after successful completion of work ( பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்ப) போன்ற நிர்வாகப் பாடங்களைத் தெரிவித்துள்ளாள்.
முந்தைய பதிவுகள்:















அற்புத ஆய்வு ஸ்வாமின்…