• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
சஞ்சிகை108
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
சஞ்சிகை108
No Result
View All Result
Home இலக்கியம்

செந்தமிழும் நாப்பழக்கம் – 7

முத்தையா செட்டி சுப்பிரமணி by முத்தையா செட்டி சுப்பிரமணி
January 16, 2021
in இலக்கியம், கட்டுரை
0
செந்தமிழும் நாப்பழக்கம் – 7
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare in Whatsapp

வாங்க தமிழ் கற்கலாம்…

இணைச்சொற்கள்.

1. “அடியோலை அச்சோலை”.அடியோலை = முதற்கண் எழுதப்பட்டவோலை அல்லது மூலவோலை.அச்சோலை = மூலவோலையை பார்த்தெழுதப்பட்ட ‘படியோலை’. 
‘அடி’ என்பது ‘மூலம்’ என்று பொருள்படுவதை, அடிமனை, அடிப்பத்திரம் என்பனவற்றில் அறியலாம்.
மூலத்தில் உள்ளதுள்ளபடி படியெடுப்பது அச்சோலையாம்.  “மூட்சியில் கிழித்தவோலை படியோலை, மூலவோலை மாட்சியிற் காட்டவைத்தேன்” (பெரியபுராணம், தடுத்தாட்கொண்டபடலம் 56) எனவருவதில் சுட்டப்படும் படியோலை, அச்சோலையாம்.
அச்சடிச்சீலை, அச்சுவெல்லம், வார்ப்பட  அச்சு என்பவற்றைக்கொண்டு, ‘அச்சு’, ‘படி’ எனும்பொருள்படுவதை அறிக.
2. “அக்குவேறு, ஆணிவேறு”.
அக்கு = முள்.ஆணி = காலடியில் தோன்றிய கட்டி.
முள்தைத்து அஃது எடுக்கப்படாமலே நின்றுபோனால், அவ்விடம் கட்டிப்பட்டு கல்போலாகி காலையூன்றமுடியா வலிக்கு ஆளாக்கும். பின்னர், அவ்விடத்தை அகழ்ந்து கட்டியையும் முள்ளையும் அகற்றுதலுண்டு. 
அதனை ‘ஆணிபிடுங்குதல்’ என்பர். ‘காலாணி எடுக்கப்படும்’ என விளம்பரம் செய்துக்கொண்டு வீதியோரங்களில் இருப்பாரை நகரப்பகுதிகளில் காணலாம். இதேபோல் கூவிக்கொண்டு தெருக்களில் வருவாரையும் காணலாம்.
அக்கமணி =  முள்மணி.அக்கம் = முள்.”அக்குவேறு ஆணிவேறாகப்பிடுங்குதல்” என்பது வழக்கு.
3. “அடுத்தும்தொடுத்தும்”.
அடுத்தல் = இடைவெளிபடுதல்.தொடுத்தல் = இடைவெளிபடாமை.
அண்டைவீடு, அடுத்தவீடு என்பனவும், அண்டியவர், அடுத்தவர் என்பனவும் கொண்டு ‘அடுத்தல்’ பொருளையறிக.
தொடர், தொடர்ச்சி, தொடர்பு, தொடலை, தொடர்வண்டி, தொடர்பொழிவு இவற்றால் ‘தொடுத்தல்’ பொருளையறிக.தொடலை = மகளிர் விளையாட்டு.
“அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்பருவத்தால் அன்றிப் பழா” – மூதுரை.பழா = பழுக்காது.


முதுபெரும்புலவர்  திரு இரா.இளங்குமரன் அவர்களது “இணைச்சொல்லகராதி” என்னும் நூலிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.

(தொடரும்)

முந்தையப் பதிவுகள்:

பாகம்-1, பாகம்-2, பாகம்-3, பாகம்-4, பாகம்-5, பாகம்-6

Previous Post

438 ஆண்டுகளுக்கு முன்னரே சமூக விலகலை கடைப்பிடிக்க சொன்ன இத்தாலிய மருத்துவர்

Next Post

திருப்பாவையில் நிர்வாகத் திறன் சிந்தனைகள் – பாகம் 4

முத்தையா செட்டி சுப்பிரமணி

முத்தையா செட்டி சுப்பிரமணி

Next Post
திருப்பாவையில் நிர்வாகத் திறன் சிந்தனைகள் – பாகம் 4

திருப்பாவையில் நிர்வாகத் திறன் சிந்தனைகள் - பாகம் 4

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

August 27, 2020
பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள்

January 1, 2021
முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம்  வெறும் கனவு தான்!

முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம் வெறும் கனவு தான்!

October 27, 2021
‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

January 14, 2021
பாரதிய கல்வி (பகுதி – 5)

பாரதிய கல்வி (பகுதி – 5)

11
பாரதிய கல்வி (பகுதி-1)

பாரதிய கல்வி (பகுதி-1)

10
ஊர் கூடித் தேரிழுப்போம்..

ஊர் கூடித் தேரிழுப்போம்..

10
தாகம் தணிக்குமா கானல்நீர்

தாகம் தணிக்குமா கானல்நீர்

7
ஜெய் ஸ்ரீராம் !

ஜெய் ஸ்ரீராம் !

January 22, 2024
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023

Recent News

ஜெய் ஸ்ரீராம் !

ஜெய் ஸ்ரீராம் !

January 22, 2024
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023
சஞ்சிகை108

© 2022 sanjigai 108

Navigate Site

  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

© 2022 sanjigai 108