• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
சஞ்சிகை108
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
சஞ்சிகை108
No Result
View All Result
Home தமிழ்நாடு செய்திகள்

ஏன் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது? – பாகம்-5

ஈரோடு சரவணன் by ஈரோடு சரவணன்
March 25, 2021
in தமிழ்நாடு செய்திகள், வரலாறு
0
ஏன்  தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது? – பாகம்-5
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare in Whatsapp

ரிலையன்ஸ் ஊழல்   –   முரளி தியோரா பெட்ரோலிய அமைச்சராக இருந்த போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளித்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது.  இந்த முறைகேடுகள் 2006 முதல் 2008 வரையுள்ள காலக் கட்டத்தில் நடந்துள்ளது.  சி.ஏ.ஜி.அறிக்கையில் மூன்று முக்கியமான குற்றச்சாட்டுகளை வைக்கிறது.  முதலாவதாக  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்( ஆர்.ஐ.எல்) கெய்ர்ன் நிறுவனங்களுக்கு அரசு, எண்ணெய் துரப்பண பணியை 3 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை இஷ்டம் போல் நீட்டித்துத் தந்த்து.  இரண்டாவதாக, எண்ணெய் எடுக்கப்படாத இடங்களுக்கான ஒப்பந்தங்களை தானே எடுத்துக் கொண்டு, மறு டெண்டர் விடுவதற்கு பதிலாக அரசு ஆர்.ஐ.எல். மற்றும் கெய்ர்ன் நிறுவனங்களுக்கே ஒப்பந்த்த்தை நீட்டித்துத் தந்த்து.  மூன்றாவதாக  ஆர்.ஐ.எல். நிறுவனம், தனது மூலதன செலவுத் தேவைகளை 117 சதவீதம் அதிகரித்துக் ( 2004 -2006 கால கட்டத்தில்) காட்டியது.  அது அரசுக்கு வந்திருக்க வேண்டிய வருவாய்.  இதில் மோசடி நடந்துள்ளது என்பது, கேஜி 6 படுகையில் மே மாதம் 2004 முதல் 2006  அக்டேபர் வரையிலான கால கட்டத்தில் ரிலையன்ஸின் மூலதன செலவுகள் அதிகமாயிருப்பதை சி.ஏ.ஜி கேள்வி கேட்டுக் துளைத்திருக்கிறது.  அதாவது துவக்க காலத்தில் மேபாட்டுத் திட்டத்தின் 2.39 பில்லியன் டாலர்  மூலதனச் செலவு பிடிக்கும் என ரிலையன்ஸ் கணக்கிட்டது.  ஆனால் 2006 அக்டேபரில் அதனை 5.19 பில்லியன் டாலராக ஆக்கிவிட்டது. இதில் தான் முறைகேடு நடந்துள்ளது.  சி.ஏ.ஜி யின் அறிக்கையின் படி முதல் மதிப்பீட்டுக்கும் இரண்டாவது மதிப்பீட்டுக்கும் உள்ள அதிரடி வித்தியாசம், அரசின் நிதிநிலையைப் பாதிக்கக்கூடியது. என்று குறிப்பிட்டுள்ளது.

மருமகன் அடித்த கொள்ளை

     ஒரு பில்லியனராக ஆக, டாட்டாவுக்கு 50 ஆண்டுகள் பிடித்த்து.  ஆனால் சோனியாவின் மருமகன் ராபர்ட்வதேராவிற்கு பில்லியனராக மாற வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே பிடித்தன.  1997-ல் வெறும் 50 லட்சம் மட்டுமே முதலீடாக இருந்த சொத்து, 2010-ல் அறிவிக்கப்பட்ட சொத்து 60.53 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.  டி.எல்.எப். விவகாரத்தில் சோனியாவின் மருமகன் பெயர் அடிப்பட்ட போது, அது ஒரு தனிநபர், ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்டது என காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது.  ஆனால் அந்த விவகாரம் தொடர்பாக நீதி மன்ற விசாரனையில் வதேராவுக்கு ஆதரவாக அரசு ஒரு அறிக்கையை தாக்கல் செய்து அவரை காப்பற்ற ஹரியான காங்கிரஸ் அரசு முன் வந்துள்ளது.  ஆகவே மருமகன் அடித்த கொள்ளையைப் பற்றி இதுவரை திருமதி சோனியா காந்தி வாய் திறக்கவில்லை.   கூட்டணியில்  இருக்கும்  தி.மு.க.வும் வாய் திறக்கவில்லை.

ஸ்டாலினின்  புது  அவதாரம்  –   மக்களை முட்டாளாக்கும்  முயற்சி

                கடந்த ஜனவரி மாதம் 29ந் தேதி உங்கள் தொகுதியில்  ஸ்டாலின் என்ற ஒரு புதிய பிரச்சாரத்தை  திருவண்ணாமலையில்  துவக்கியுள்ளார்.   இந்த நிகழ்ச்சியில்  ஸ்டாலின் பேசிய பேச்சு  மிகப் பெரிய விமர்சனத்தை சந்திக்கிறது.        தலைவர் தான் சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம் என்று சொன்னார். அவரது வழியில் இந்த ஸ்டாலினும் சொன்னதைச் செய்வான். செய்வதைத்தான் சொல்வான் என்ற உறுதிமொழியை நான் கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் இருந்து எடுத்துக் கொண்டேன்.     ஸ்டாலின் சொல்வது போல்  தி.மு.க. தலைவர்கள்  ஆட்சிக்கு வருவதற்கு சொல்வது ஒன்றும், ஆட்சிக்கு வந்த பினனர்,  தனது பேச்சு திறமையால் அதற்கு விளக்கம் கொடுப்பது வாடிக்கையான ஒன்று என ஸ்டாலினுக்கு தெரியாது.

                  தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன் சொல்வது ஒன்று , வந்த பின்னர்  அதை கைவிடுவது மற்றொன்று.   இவர்களின் உறுதி மொழி எவ்வாறு அமைந்தது என்பதை  தி.மு.க.வை துவக்கிய அண்ணாதுரை முதல் இன்றைய ஸ்டாலின் வரை பல சம்பவங்களை சுட்டிக் காட்டலாம்.     1949-ல்  துவக்கிய போது திராவிட நாடு முதன்மையான கொள்கையாக பறைசாற்றப்பட்டது.   இவர்களின் அடைமொழியில்  கூறுவதென்றால்,  அடைந்தால்   திராவிட நாடு இல்லையேல்  சுடுகாடு   என முழக்கமிட்டவர்கள்.  திராவிட நாடு அடைந்தார்களா என்பதை ஸ்டாலின் விளக்க வேண்டும்.  1962-ல்  மத்திய உள்துறை அமைச்சர்  திரு. ஒய்.பி.சவான்,  பிரிவினை தடை மசோதாவை தாக்கல் செய்தவுடன்,   “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம் என்று சொல்லவில்லை; ஒத்தி வைத்துள்ளோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று சமாளித்தார்.    இன்று வரை திராவிட நாடு கோரிக்கை என்னவாயிற்று என்பது ஸ்டாலினுக்கே தெரியாது.   இதுவே முதல் சறுக்கலாகும்.   முதல் சறுக்கல்  முற்றிலும் சறுக்கல் என்பது போல் தொடர்ந்து  பல வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன. 

                1967-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில்,  தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்  ரூபாய்க்கு 3 படி அரிசி லட்சியம்,  ஒரு படி நிச்சயம்  என வாக்குறுதி அளிக்கப்பட்டது.   ஆட்சியில் அமர்ந்தவுடன்  சென்னை மற்றும் கோவையில்  மட்டும் ரூபாய்க்கு 1 படி அரிசி வழங்கப்பட்டது, அதுவும் சில மாதங்களிலேயே,  நிதி பற்றாக்குறையின் காரணமாக கைவிடப்பட்டது.    67-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு , தி.மு.க. தலைவர் அண்ணாதுரை கொடுத்த வாக்குறுதிகள்  எதுவும் நிறைவேற்றப்படவில்லை.   ஆட்டுக்கு தாடியும்,  ஆட்சிக்கு ஆளுநர் பதவியும் தேவையா?  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆளுநர் பதவியை நீக்குவோம்.  ஆனால் இன்று வரை ஆளுநர் பதவியை நீக்க எந்த நடவடிக்கையும்  எடுக்க முயலவில்லை.   பாராளுமன்றத்தில் இது பற்றிய தனி நபர் தீர்மானம்  கொண்டு வரவில்லை.    மிகவும் முக்கியமான வாக்குறுதி,  நேர்மையான தேர்தல் நடக்க,  நாங்கள் ஆட்சியிலிருந்தால்,  தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கு முன்பே மந்திரிசபையை களைத்து விட்டு,  சுதந்திரமாக தேர்தலை சந்திப்போம்  என சூளுரைத்த தி.மு.க. தலைவர்  ஆட்சிக்கு வந்து தேர்தலை சந்திக்கும்  போது,  மற்ற கட்சிகளும் ஏற்றுக் கொண்டால்  நிறைவேற்றலாம் என பிடரியில் பின்னங்கால் படும் படி ஓடியவர்கள்  தான்,  சொன்னதை செய்தார்கள் என்றும்  சொல்வதை தான் செய்தார்கள் என்றும் கூறுகிறார்கள்.  

                . சென்னை நகரை, குடிசைகள் அற்ற நகரமாக ஆக்க திட்டம் தீட்டினார். அது தான் குடிசை மாற்று வாரியம். 1971ல், இந்த வாரியம் உருவாக்கப்பட்டது.குடிசைகளுக்கு மாற்றாக, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி, அவற்றில் குடிசை வாழ் மக்களை குடியமர்த்துவது தான் திட்டத்தின் நோக்கம்.    இதற்காக சுதந்திரமடைந்து, 25 ஆண்டுகள் வரை, எந்த தீ விபத்திலும் சிக்காமலிருந்த சென்னை குடிசைப் பகுதிகள், தொடர்ந்து ஒவ்வொன்றாக எரிய ஆரம்பித்தன. அந்த தீ விபத்துகளுக்கு, ‘பாஸ்பரஸ்’ என்ற, தானாகவே சூரிய ஒளிபட்டு எரியும் பொருளே காரணம் என்று வதந்தி பரவியது. கூடவே, ‘ஆட்சியை இழந்த காங்கிரஸ்காரர்கள் தான், ஆங்காங்கே குடிசைகளைக் கொளுத்திக் கொண்டிருக்கின்றனர்’ என்ற குற்றச்சாட்டும் திட்டமிட்டுப்   தி.மு.க.வால்  பரப்பப்பட்டது.   அன்றைய  காலக் கட்டத்தில் , சென்னையில் அதிக பட்சமாக, 15 – 20 ஆயிரம் குடிசைகள் இருந்திருக்கலாம். அந்த, 20 ஆயிரம் குடிசைகளுக்கு மாற்றாக, 20 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, அந்த குடிசை வாழ் மக்கள், அடுக்கு மாடிகளில் குடியமர்த்தப்பட்ட பிறகு, சென்னையில் ஒரு குடிசை கூட இருந்திருக்கக் கூடாதல்லவா? அப்படித் தான் இப்போது இருக்கிறதா; இல்லையே!குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்களும் பெருகின. சென்னையில் புதுப்புது இடங்களில் குடிசைகளும் முளைத்துக் கொண்டே இருந்தன. 48 ஆண்டுகளாக கட்டுகின்றனர்; கட்டுகின்றனர்; கட்டிக் கொண்டே  இருக்கின்றனர்.   சென்னையில்  குடிசைகள் ஒழிந்தபாடில்லை.   இதுதான் இவர்களின்  சொல்வதை செய்த லட்சனமாகும்.

(தொடரும்)

முந்தையப் பதிவு: பாகம்-1,பாகம்-2,பாகம்-3,பாகம்-4

Previous Post

வாக்குறுதிகளை நம்பாதே!

Next Post

சொல்லப் பழகுவோம், சொல்லிப் பழகுவோம், சொல்லித்தரப் பழகுவோம்!

ஈரோடு சரவணன்

ஈரோடு சரவணன்

Next Post
சொல்லப் பழகுவோம், சொல்லிப் பழகுவோம், சொல்லித்தரப் பழகுவோம்!

சொல்லப் பழகுவோம், சொல்லிப் பழகுவோம், சொல்லித்தரப் பழகுவோம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

August 27, 2020
பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள்

January 1, 2021
முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம்  வெறும் கனவு தான்!

முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம் வெறும் கனவு தான்!

October 27, 2021
‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

January 14, 2021
பாரதிய கல்வி (பகுதி – 5)

பாரதிய கல்வி (பகுதி – 5)

11
பாரதிய கல்வி (பகுதி-1)

பாரதிய கல்வி (பகுதி-1)

10
ஊர் கூடித் தேரிழுப்போம்..

ஊர் கூடித் தேரிழுப்போம்..

10
தாகம் தணிக்குமா கானல்நீர்

தாகம் தணிக்குமா கானல்நீர்

7
ஜெய் ஸ்ரீராம் !

ஜெய் ஸ்ரீராம் !

January 22, 2024
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023

Recent News

ஜெய் ஸ்ரீராம் !

ஜெய் ஸ்ரீராம் !

January 22, 2024
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023
சஞ்சிகை108

© 2022 sanjigai 108

Navigate Site

  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

© 2022 sanjigai 108