காமன்வெல்த் விளையாட்டு ஊழல் – சுமார் 8,000 கோடிக்கு மேல் மக்கள் வரி பணத்தை வைத்து நடந்திருக்கும் இந்தப் பகல் கொள்ளையில் கல்மாடியும், விளையாட்டு ஏற்பாடு குழுவும் மட்டும் பொறுப்பல்ல, இந்த விளையாட்டு போட்டியை அமலாக்தில் பங்கு வகிக்கும் தில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித், உட்பட பல்வேறு அமைச்சர்களுக்கும் இதில் தொடர்ப்பு உள்ளது. விஞ்ஞான ரீதியாக கொள்யைடிப்பதில் காங்கிரஸ் கட்சியின் கைதேர்ந்தவர்கள் என்பதை காட்டுவதாக உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் அடித்த கொள்ளைகள். சில கொள்ளைகளை பார்த்தாலே இதன் விபரீதம் நன்கு புரியும். அவசர விளக்கு வாங்கும் போது 1 விளக்கின் சந்தை விலை ரூ920 , கல்மாடி வாங்கியது ரூ2,623 ஒரு விளக்கின் விலையில் வாங்கியுள்ளார். ரூ18,000க்கு சந்தையில் விற்கப்படுகின்ற வின்டோ ஏ.சியின். விலை, கல்மாடி வாங்கும் போது ரூ1,18,182க்கு வாங்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது, இது போல் 110 வின்டோ ஏ.சி வாங்கப்பட்டுள்ளது, இதில் மட்டும் கோடிக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
எஸ் பாண்ட் ஊழல் — 2ஜியை ஜன்பத் ஆதரவு பெற்ற ஊழல் என்றால், 4ஜி எஸ்.பாண்ட் ஊழல் ரேஸ் கோர்ஸ் ஆதரவு பெற்ற ஊழல் என்றால் மிகையாகாது. இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு 150 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை கொடுக்கப்பட்டு இருந்த்து. இதற்கு பெயர் எஸ்-பாண்ட் அலைக்கற்றை என்று பெயர். இந்த எஸ் பாண்டிலிருந்து தான் சன், டாடா, ஏர்டெல் என்று பல சேனல்கள் டி.டி.ஹெச் ஒளிபரப்பை நடத்துகின்றன. காலியாக இருந்த எஸ்.பாண்ட்-ஐ வைத்து இஸ்ரோ வியாபரத்தைத் தொடங்கியது, இதில் தான் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கை துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுமார் 2 லட்சம் கோடிக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவாஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியே இந்த முறைகேட்டில் மையப் புள்ளி. இஸ்ரோவைச் சார்ந்த டாக்டர் எஸ்.சந்திரசேகர் என்பவர் ஓய்வு பெற்றதும், இன்னும் சிலர் கட்டாய ஓய்விலும் வெளியேறி தேவாஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார்கள். இந்த நிறுவனம் இஸ்ரோ வசம் உள்ள அதிக சக்தி வாய்ந்த 70 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை தங்கள் வசம் கொண்டு வரம் முயற்சிக்கு வித்திட்டார்கள். 12 வருடங்களுக்கு இவர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்படுகிறது. இஸ்ரோ நிறுவனம் தனது வர்த்தக நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் மூலம் இந்த ஒப்பந்த்த்தை செய்து கொண்டது. இந்திய அரசிடம் இருக்கின்ற சென்சிட்டிவ்வான பல துறைகளில் அணுசக்தியை அடுத்து மிக முக்கியமான விவகாரம் விண்வெளி துறையாகும். 2ஜி விவகாரம் விவாத பொருளாக மாறிய போது, 4ஜி விவகாரமும் வெளிச்சத்திற்கு வந்த்து. இந்த ஒப்பந்தம் பிரமருக்கு தெரிந்து நடந்த்தா? பிரதமரை ஏமாற்றி விட்டு அவரைச் சுற்றி இருக்கும் லாபி அலைக்கற்றையை முழுங்கியதா? என பத்திரிக்கைகளும், எதிர்கட்சிகளும் குடைய துவங்கின. மிகவும் முக்கியமான துறையான விண்வெளியில் நடந்துள்ள ஒப்பந்தம், என்ன நடக்கிறது என்பது தெரியாமல் ஒரு பிரதமர் இருந்தால், நாட்டின் பாதுகாப்பு பற்றி அவருக்கு எந்த அக்கறையும் கிடையாது என்றே அர்த்தம். மேலும் 2005 ஜனவரி மாதம் 28-ல் மன்மோகன் சிங் பிரதமாராக இருந்த போது, தனியார் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கி ஓர் ஒப்பந்த்த்தைப் போட்டது, அந்த ஒப்பந்தம் பிரதமருக்கும், அவரது அமைச்சரவைக்கும் சரியாக விளக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை.
இந்த ஒப்பந்த்த்தின் படி இரண்டு செயறகைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியாக வேண்டும். இதைத் தான் பிரதமரது அலுவலகம் தெரியாது என தெரிவித்துள்ளது. இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் வெளிப்படையாக பத்திரிக்கையாளர்களிடம், இது பிரதமருக்கு தெரியாது என ஒப்புக் கொண்டார். இது உண்மை என்றால் பிரதமருக்கு தெரியாமல் மறைத்தவர்கள் யார் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.
அரிசி ஏற்றுமதி ஊழல் – ஆனந்த் சர்மா தலைமையில் உள்ள வர்த்தக அமைச்சகம், பாசுமதி அல்லாத அரிசி 1மில்லியன் டன் ஏற்றுமதி செய்ததில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் விதிப்படி 12,500 டன்னுக்கும் ஒரு உரிமம் வழங்கப்பட வேண்டும். இந்த விதிக்கு புறம்பாக 2011 ஜீலை மாதம் 19 தேதி வெளி நாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல் (டி.ஜி.எஃப்டி) வெறும் 14 நிறுவனங்களுக்கும், 24 தனி நபர்களுக்கு மட்டும் உரிமம் வழங்கியுள்ளார். லட்சக்கணக்கான டன் அரிசி ஏற்றுமதியை ஆறு நபர்களே அனைத்தும் வளைத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்த்து. 2009 முதல் 2011 வரை மட்டுமே இதுவரை இல்லாத அளவுக்கு அரிசி ஏற்றுமதி உரிமங்கள் வழங்கப்பட்டன. அரிசி ஏற்றுமதி உரிமம் வழங்கும் நடைமுறையும் கூட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வெளிப்படையானதாக இல்லை. கோட்டாவுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 3,500 விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதவிறக்கும் செய்யப்பட்டதால், இணைய தளமே முடங்கிப் போனது. அரசு ஏற்றுமதி அரிசிக்கு டன் 1க்கு 400 டாலர் என விலை நிர்ணயம் செய்த்து, ஆனால் வெளிச்சந்தையில் டன் 1க்கு 530 டாலர் விற்கும் போது 130 டாலர் குறைவாக விலை நிர்ணயம் செய்ததால் அரசுக்கு இழப்பு ரூ650 கோடி, இது அரசியல்வாதிகள் , அமைச்சர்களுக்கு சென்றதாக விசாரனையில் தெரியவந்தது. 12,500 டன்னுக்கு ஒரு உரிமம் வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தும், விதி மீறப்பட்டு, அகமதாபாத் நகரைச் சார்ந்த அடானி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு 50,000 டன் ஒதுக்கீடு கொடுக்க உரிமம் வழங்கப்பட்டது. மும்பையை சார்ந்த அல் கியாஸ் எக்ஸ்போர்ட் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கும் சேர்ந்து 62,000 டன்னுக்கு உரிமம் வழங்கப்பட்டது. ஜே.கே ஜெயின் என்பவருக்கு 16 உரிமங்கள், அஸ்வின் ஷா என்ற நிறுவனத்திற்கு 3 உரிமங்கள், அல் கியாஸ் என்ற நிறுவனத்திற்கு 5 உரிமங்கள், பகாரியா நிறுவனத்திற்கு 8 உரிமங்கள் என அமைச்சருக்கு வேண்டியவர்களுக்கு அதிக அளவு உரிமங்கள் வழங்கப்பட்டன.
(தொடரும்)













