தமிழக வாக்காளர்களுக்கு அன்பான வேண்டுகோள், 2021-ல் நடைபெறும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வாக்களிக்க கூடாது. ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும். ஏன் தி.மு.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்கு பல முக்கியமான காரணங்கள் உள்ளன. அவைகளில், ஒன்று ஊழல் மலிந்த தலைவர்களை கொண்ட கட்சி , இரண்டாவது தேசத்தின் பாதுகாப்பிற்கும், இறையான்மைக்கும் ஊறு விளைவிக்கும் தலைவர்களை கொண்ட கூட்டணி, மூன்றாவது பாரத தேசத்தின் கலாச்சாரத்திற்கு புறம்பான சிந்தனை கொண்டவர்கள் அடங்கிய கூட்டணி, நான்காவது பிரிவினைவாத, பயங்கரவாத போக்கு கொண்டவர்களுடன் உறவாடுகின்ற கூட்டணி., ஐந்தாவதாக குடும்ப அரசியலை மேம்படுத்தும் கட்சி. மேலும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கு மாறாக எல்லா திட்டங்களையும் எதிர்க்கும் . ஓரே நோக்கம் கொண்ட கூட்டணியாகும்.
ஊழல் மலிந்த தலைவர்கள் – தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும், தி.மு.க.வில் பொறுப்பில் உள்ள தலைவர்கள் மீதும் ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் உள்ளன. இவர்களை அருகில் வைத்துக் கொண்டு ஊழலுக்கு எதிரான கட்சி தி.மு.க. என வீதிதோறும் பிரச்சாரம் செய்வது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. இவர்களின் ஊழல் திருவிளைாயடல்களை சிலவற்றை பார்ப்போம்.
திருவாளர் கருணாநிதி ஆட்சியின் முதல் ஊழல் கூவம் நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மூலம் தொடங்கியது. அன்றைய காலகட்டத்தில் கூவம் நதியை தூய்மைப்படுத்த ரூ 3 கோடி ஒதுக்கப்பட்டது. இது செலவழிக்கப்படவில்லை. இந்த நிதி என்ன ஆயிற்று என்று கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அங்கு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று கருணாநிதி பதிலளித்தார்.. அடுத்த நாள் கூவத்தில் முதலை என்று வதந்தி கிளப்பி விடப்பட்டது. சாக்கடையில் எப்படி முதலை வரும்? என்ற அடிப்படையான கேள்வியையும் தாண்டி இந்த வதந்தி திட்டமிட்டு பரப்பப்பட்டது. பின்னர் பணியாளர்கள் கூவத்தில் வேலை செய்ய பயப்படுகிறார்கள் என்றும் அதனால் வேலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் அந்த நிதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. அடுத்து மிகப் பெரிய ஊழலுக்காக சட்ட திருத்தம் கொண்டு வந்தது.
குளோப் தியேட்டர் ஊழல். அண்ணாசாலையில் இருக்கும் இந்த தியேட்டர் கட்டிடம் வட இந்தியாவை சார்ந்த குஷால்தாஸ் என்பவருக்கு சொந்தமானது வரதராஜன் பிள்ளை என்பவர் 25 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார். குத்தகை கட்டணமாக குஷால் தாஸுக்கு ஆண்டுதோறும் 5000 ரூபாய் கொடுக்கிறார் வரதராஜன். தியேட்டர் நடத்துவதால் ஆண்டுக்கு நாலு லட்சத்து பதினான்காயிரம். வரதராஜப் பிள்ளைக்கு கிடைக்கும் இந்த வருமானத்தைப் பார்த்தும், எதிர்ப்பு தெரிவிக்காத குஷால்தாஸ், குத்தகை காலம் முடிவடைந்ததும், குத்தகையை புதுப்பிக்க விருப்பமில்லை என்று தெரிவிக்கிறார். வரதராஜப் பிள்ளை இதனை தக்க வைக்க எனக்கே விற்று விடுங்கள் என்று அடிமாட்டு விலைக்கு கேட்கிறார். இதனால் குஷால்தாஸ் வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கு, பல்வேறு விசாரணைக்குப் பிறகு உச்சநீதிமன்றத்துக்கு செல்கிறது. உச்சநீதிமன்றம், குஷால் தாஸூக்கு ஆதரவாக தீர்பபளிக்கிறது. அது மட்டுமல்லாமல் ஆறு வார காலத்திற்குள் இடத்தைக் காலி செய்து, உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறது.
இந்நிலையில் இதனை எப்படியாவது தன் வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த வரதராஜ பிள்ளை அன்றைய ஆட்சியாளர்களை சந்திக்க விரும்பினார். அதற்காக முரசொலி மாறனை அணுகுகிறார். அவர் அதற்காக அமைச்சர் ப.உ.சண்முகத்தை சந்திக்க சொல்கிறார். உடனே வரதராஜ பிள்ளை ஆதரவாக அமைச்சர் ப.உ.சண்முகம், சட்டதிருத்தம் கொண்டு வந்து உங்களுக்கே அந்த இடத்தை சொந்தமாக்கிக் கொள்ளுமாறு செய்கிறோம். அதற்காக சில லட்சங்கள் தேவைப்படுகிறது என்றார். முதலமைச்சர் கருணா நிதியை சந்திக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்படுகிறது. அவரை சந்திக்க சென்ற வரதராஜபிள்ளையிடம் கருணாநிதி பேரம் பேசுகிறார். பின்னர் சில பல ஆயிரங்கள் கைமாறுகின்றன.
இதன் தொடர்ச்சியில் உடனடியாக சட்டமன்றத்தில் இதற்காக சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது. அது தான் நீண்ட காலமாக குத்தகைக்கு இருந்தால் அந்த இடத்தை சம்பந்தப்பட்டவர் உரிமையாக்கிக் கொள்ளும் வகையிலான தமிழ்நாடு குத்தகைதாரர் சட்டம். இந்த சட்டம் உடனடியாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அதே வேகத்தில் அவருடைய ஒப்புதலைப் பெற்று நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் குளோபல் தியேட்டர் இடம் வரதராஜபிள்ளைக்கு சொந்தமானது.
வீராணம் திட்டம் – 1970 களில் சென்னை நகரில் தண்ணீர் பஞ்சம் தலைவரித்து ஆடியது. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே கொண்டு வரப்பட்ட திட்டம் என அறிவித்தாலும், ஆட்சியாளர்கள் கொள்ளையடிப்பதற்காகவே கொண்டு வரப்பட்ட திட்டம் என்பது பின்னாளில் வெளிச்சத்திற்கு வந்தது. சென்னை நகரிலிருந்து 222 கி.மீ. தூரத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து சுத்திகரிக்கப்படாத நீரை எடுத்து, நெய்வேலிக்கு அருகில் உள்ள வடக்குத்து என்ற இடத்தில் அமைக்கப்பட இருந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்து சென்னை மாநகருக்கு 198 கி..மீ. தூரம் குழாய்கள் பதித்து, அதன் மூலமாக குடிநீரை சென்னைக்கு அனுப்ப வேண்டும் என்பது திட்டத்தின் முழு வடிமாகும். ஐம்பதுகளில் பொதுப்பணிக்கான ஒப்பந்தம் வழங்குவதை ஒரு சில பொறியாளர்கள் முடிவெடுக்க அதிகாரம் கொடுப்பட்டிருந்தது. 1954-ல் சுந்தரம் என்ற ஐ.சி.எஸ். அதிகாரி, இது போல் தனிநபருக்கு அதிகாரம் வழங்குவது மக்களாட்சி முறைக்கு உகந்தல்ல என்றும், நான்கு துறைகளின் பொறியாளர்கள் அடங்கிய குழு அமைத்து முடிவெடுக்கலாம் என குறிப்பு எழுதினார்.
சத்தியநாராயணா நிறுவத்திற்கு ஒப்பந்தம் வழங்க வேண்டும் என்பது கருணாநிதியின் ஆசை. இதுபற்றி சர்காரியா கமிஷனலில் பதிவான ஒன்று, சத்தியநாராயணா நிறுவனம், கூட்டு ஒப்பந்தம் செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களை நேரில் ஆய்வு செய்து, அந்த நிறுவனங்களிடம் இத் திட்டத்திற்குத் தேவைாயன குழாய்களைத் தயாரிக்கும் அளவுக்கு வசதி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் அதன் பிறகு இந்நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கலாம் என்று பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் சாதிக்பாட்சாவிடம் அறிக்கை அளிக்கப்படுகிறது. தலைமை பொறியாளரை அழைத்து, முதலில் வேலைக்கான ஆணையை வழங்கி விட்டு, அதன் பிறகு தகுதி இருக்கிறதா என்று பார்ப்போம். முதலமைச்சர் விருப்ப்படி நடந்து கொள்ளுங்கள் அவ்ளோதான் சொல்லிவிட்டேன் என கூறியவர் பொதுப்பணித்துறை அமைச்சர் சாதிக்பாட்சா. இந்த விதி மீறல், எச்சரிக்கை செய்த கட்சி தி.மு.க. இதன் மூலம் ஆதாயம் அடைந்தவர் கருணாநிதி இதற்கு ஸ்டாலின் விளக்கம் கொடுப்பாரா ?
(தொடரும்)














