• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
சஞ்சிகை108
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
சஞ்சிகை108
No Result
View All Result
Home தமிழ்நாடு செய்திகள்

ஏன் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது? – பாகம்-3

ஈரோடு சரவணன் by ஈரோடு சரவணன்
March 21, 2021
in தமிழ்நாடு செய்திகள்
0
ஏன்  தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது? – பாகம்-3
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare in Whatsapp

2 ஜி அலைக் கற்றை ஊழல்  –      சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல் தொகை முழுவதும் கூட்டினால் கூட ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகை நெருங்க முடியாது.  இந்த ஊழல் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி கேள்வி கனைகளை தொடுத்த போது, பிரதமர் உட்பட கேபினட் அமைச்சர்கள் அனைவரும், ஊழல் நடக்கவில்லை என்றே வாதிட்டார்கள்.  சி.ஏ.ஜி அறிக்கை வெளி வந்த பின்னர் தான் இந்த மோசடியில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு தெரியவந்தது.  இதில் ஒரு லட்சத்த்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு என்ற மதிப்பீடு பலரையும் திகைக்க வைத்த்து.        அலைக்கற்றையின் சரியான விலையை அறிவதற்காக ஏலம் என்ற ஒளிவு மறைவற்ற முறையை பயன்படுத்துமாறு 2.11.2007ந் தேதி அமைச்சர் ராசாவிடம் கூறிய பிரதம மந்திரி 3.1.2008-ல் அது பற்றி கண்டும் கானாமலும் இருந்த்து ஏன்?  2.11.20007க்கம் 3.1.2008க்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்த்து, அல்லது தி,மு.க. கொடுத்த நெருக்கடி அவ்வளவு கடுமையானதாக இருந்த்தா? என்பது  போன்ற கேள்விகளுக்கு இன்னு வரை முன்னாள் பிரதமரிடமிருந்து விளக்கம் வரவில்லை.    அதில் சம்பந்தப்பட்ட தி.மு.க.வின் தலைவர்களிடமிருந்தும்  எந்த விதமான பதிலும் வெளி வரவில்லை.

          நிலக்கரி ஊழல்  —          2011-ம் வருடம் மே மாதம் 12-14 தேதியிட்ட ஒரு தமிழ் வார பத்திரிக்கையின் முகப்பு அட்டையில் 26 லட்சம் கோடி…….. ஸ்பெக்ட்ரத்தை மிஞ்சும் நிலக்கரி ஏழல்  அம்பலத்திற்கு வரும் அதிர்ச்சி தகவல்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.  ஆனால் 2012-ம் வருடம் செப்டம்பர் மாதம் தான் இது பாராளுமன்றத்தில் பற்றி எரிந்த்து.  ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் என்ன நடந்த்து என்று எனக்க தெரியாது.  தவறே நடக்கவில்லை என்று துறை அமைச்சர் ராசா சொன்னதை நான் நம்பினேன்.  இதற்கு மேல் எனக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை.  என பிரதமர் தெரிவித்தார்.  ஆனால் தன்வசம் வைத்திருந்த நிலக்கரி துறையில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது என்பது எவ்வாறு தெரியாமல் போனது, விக்கரமாதித்தன் கதையாக மாறிவிட்டது.

      2004-ல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சராக இருந்த சிபுசோரன் ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறை செல்ல அந்த்த் துறையை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்.  அந்த  சமயத்தில் மட்டும் 63 சுரங்கங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டன.  2004லிருந்து 2010 வரை 168 சுரங்கங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.  இதில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது 113 சுரங்கங்கள்.  தனியாருக்கு விடப்பட்ட சுரங்கங்களில் நிலக்கரியின் அளவு 21.69 பில்லியன் டன்கள்.  இழ்ப்பீடு சம்பந்தமாக அரசு தெரிவித்த கருத்து, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், மின் தேவையையும் கவனத்தில் கொண்டு என்ற வார்த்தையை பயன்படுத்தி தவறுகளுக்கு பரிகாரம் தேட அரசு முயல்கிறது.

       இதில் 26 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்குறிய கணக்கு, இன்றைய மார்க்கெட் நிலவரப்படி 1டன் நிலக்கரியின் விலை ரூ2500 என்றாலும், இதில் உற்பத்திச் செலவு மற்றும் போக்குவரத்துச் செலவு போக நிகர லாபம் 1டன்னுக்கு ரூ1250 கிடைக்கும்.  ஆனால் அரசு தனியாருக்கு விடப்பட்ட சுரங்கங்களில் வெட்டி எடுக்கும் நிலக்கரிக்கு டன் 1க்கு ரூ100 மட்டுமே மத்திய அரசுக்கு ராயல்டியாக கொடுத்தால் போதும் என அரசு அறிவித்த்து. இதனால் 21.69 பில்லியன் டன் விற்பனை செய்தால் அரசுக்கு கிடைக்கும் லாபம் ரூ26.91 லட்சம் கோடி ரூபாய்.

     விதிகளுக்கு புறம்பாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டது.  சுரங்க ஒதுக்கீடு பெற்றவர்கள் 36 மாதங்களுக்குள் தனது உற்பத்தியை தொடங்கி விட வேண்டும், வனப்பகுதியில் அமைந்திருந்தால், கூடுதலாக ஆறுமாதம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்பதே விதி, இந்த விதிக்கு மாறாக  உரிம்ம் பெற்ற தனியார் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்காமல், வேறு ஒருவருக்கு விற்று கொள்ளையடித்த சம்பவமும் உண்டு.

      தனது அரசை காப்பாற்றிக் கொள்வதற்கு, காங்கிரஸ் அமைச்சர்கள் பாரதிய ஜனதா கட்சியின் மீது பழியை போட்டார்கள்.  சுரங்க ஒதுக்கீட்டை ஏன் ஏலத்தில் விட வில்லை என்ற கேள்விக்கு, பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலத்தின் முதல்வர்கள் ஏலத்தில் விட எதிர்ப்பு தெரிவித்தார்கள் என பிரதமர் நா கூசாமல் பொய் பேசினார்.  போட்டிசார் ஏலமுறைக்கு பா.ஜ.க. முதல்வரகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, மாறாக 2006-ல் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் ஏல முறையை ஏற்றன., ஏல வருவாயில் தமக்கு பங்கு வேண்டும் என்பதே அவர்கள் விதித்த நிபந்தனை என்பதை தெரிவிக்க பிரதமர் மறந்து விட்டார்.

     தற்போது விசாரனையில் உள்ள விவகாரத்தில், பல்வேறு திருப்பங்கள் நடந்தன.  நிலக்கரி ஒதுக்கீடு சம்பந்தமான கோப்புகள் கானவில்லை என உச்ச நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்த்து.  பிரதமரை காப்பதற்காகவே, சட்ட அமைச்சர் தன்னிசையாக சி.பி.ஐ.யின் பிரமான வாக்குமூலத்தை திருத்தியது.  ஆகவே மிகப் பெரிய ஊழல் நடந்த போதும் வருங்கால பிரதம மந்திரியாக சித்தரிக்கப்படும் ராகுல் காந்தி வாய் திறக்கவில்லை.  ஆகவே இந்தியாவின் ஓராண்டுகால் வரி வருவாய் ரூ9.32 லட்சம் கோடி, இந்த மோசடியின் காரணமாக மூன்றாண்டுகளுக்கு இந்தியர்கள் செலுத்தும் மொத்த வரி பணம்  அளவுக்கு இந்த ஒரே ஊழலில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  எனவே மீன்டும்  தி.மு.க.  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வர வேண்டுமா என சிந்திக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு லஞ்சம்    –         2008-ல் அமெரிக்காவுடன் இந்தியா போட்டுக் கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்காக அரசை ஆதரித்த இடது சாரிகள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டார்கள்.  இதன் காரணமாக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  இந்நிலையில் அரசை காப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எதிர்கட்சி உறுப்பினர்களுக்க கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுக்க்பட்ட சம்பவம், இந்த அரசு ஊழலை தவிர வேறு எதுவும் செய்ய வில்லை என்பதை காட்டும் சம்பவமாகும். நேரிடையாகவே பாராளுமன்றத்தில் பணக் கட்டுக்களை காட்டிய பின்னரும்  குற்றவாளிகளை பிடிப்பதற்கு பதிலாக, பாராளுமன்றத்தில் பணக் கட்டுக்களை காட்டிய பாரதிய ஜனதா கட்சியினர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

(தொடரும்)

முந்தையப் பதிவு: பாகம்-1,பாகம்-2

Previous Post

இந்து மதத்தில் பெண்ணியம்!

Next Post

செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடியும் முருகன் பாடல்

ஈரோடு சரவணன்

ஈரோடு சரவணன்

Next Post
தி.மு.க. ஆட்சியில்  நடந்த அரங்கேறியுள்ள  அராஜகங்கள்-பாகம் 1

தி.மு.க. ஆட்சியில் நடந்த அரங்கேறியுள்ள அராஜகங்கள்-பாகம் 1

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

August 27, 2020
பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள்

January 1, 2021
முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம்  வெறும் கனவு தான்!

முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம் வெறும் கனவு தான்!

October 27, 2021
‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

January 14, 2021
பாரதிய கல்வி (பகுதி – 5)

பாரதிய கல்வி (பகுதி – 5)

11
பாரதிய கல்வி (பகுதி-1)

பாரதிய கல்வி (பகுதி-1)

10
ஊர் கூடித் தேரிழுப்போம்..

ஊர் கூடித் தேரிழுப்போம்..

10
தாகம் தணிக்குமா கானல்நீர்

தாகம் தணிக்குமா கானல்நீர்

7
ஜெய் ஸ்ரீராம் !

ஜெய் ஸ்ரீராம் !

January 22, 2024
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023

Recent News

ஜெய் ஸ்ரீராம் !

ஜெய் ஸ்ரீராம் !

January 22, 2024
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023
சஞ்சிகை108

© 2022 sanjigai 108

Navigate Site

  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

© 2022 sanjigai 108