• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
சஞ்சிகை108
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
சஞ்சிகை108
No Result
View All Result
Home தமிழ்நாடு செய்திகள்

ஏன் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது? – பாகம்-2

ஈரோடு சரவணன் by ஈரோடு சரவணன்
March 6, 2021
in தமிழ்நாடு செய்திகள்
0
ஏன்  தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது? – பாகம்-2
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare in Whatsapp

இதை போல் தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்கள் பட்டியல்      1. மேகலா பிக்சர்ஸ் ஊழல், 2. அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல், 3. டிராக்டர் ஊழல், 4. கருப்பு பணத்தில் கோபாலபுரம் இல்லம் விரிவாக்கம், 5. முரசொலி ஊழல், 6. திருவாரூர் வீட்டு ஊழல், 7. ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல், 8. கோபாலபுரம் வீட்டு மதிப்பு ஊழல், 9. ஊழல் அதிகாரியை காப்பாற்றி முறைகேடு செய்தது, 10. வீராணம் ஊழல்,  11 (அ).நாதன் பப்ளிகேசன்ஸ் ஊழல், 11. (ஆ) பூச்சி மருந்து தெளிப்பு ஊழல், 12. மணி அரிசி ஆலை கடன் ஊழல், 13. ஜெ.கே.கே. குழுமத்தின் விற்பனை வரி ஏய்ப்பு ஊழல், 14. சமயநல்லூர் மின்திட்ட ஊழல், 15. குளோப் தியேட்டர் வாடகை சட்டத் திருத்த ஊழல், 16. பிராட்வே டைம்ஸ் ஊழல், 17. சர்க்கரை ஆலை ஊழல், 18. கூட்டுறவு சங்க ஊழல், 19. மது ஆலை ஊழல், 20. கொடைக்கானல் & பழனி சாலை ஊழல், 21. தி.மு.க. அறக்கட்டளைகள் ஊழல், 22. நில ஆக்கிரமிப்பு & கொலை குற்றச்சாட்டு, 23. ஊழல், கிரிமினல் குற்றவாளிகளுக்கு ஆதரவு, 24. தொழிற்சங்க ஊழல், 25. ஊடகங்களுக்கு மிரட்டல், 26. மின் திருட்டு, 27. எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல், 28. இழப்பீட்டு தொகை ஊழல் 

                ஆகிய குற்றச்சாற்றுகளுக்கு ஆதாரம் இல்லாத வகையில் விஞ்ஞான முறையில் திமுகவினர் ஊழல் செய்துள்ளனர் என்று தான் சர்க்காரியா ஆணையம் கூறியதே தவிர, ஊழலே நடக்க வில்லை என்று கூறவில்லை என்ற வரலாற்றை  தி.மு.க. தலைவர் ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.   இது பற்றி வாய் திறப்பதில்லை.   தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களில் கொள்ளையடித்தவர்கள் , எப்படி நல்லாட்சி  நல்க முடியும் என்ற கேள்வியை எவரும் கேட்பதில்லை.  மத்தியில்  காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் போது  இவர்கள் நடத்திய ஊழல்களும்,  துணை போன ஊழல்களும் பலவற்றை  அலச வேண்டும்.

                2004 முதல் 2014 வரை மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்  தி.மு.க.வின்  தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு,  ஆ.ராசா போன்றவர்கள்  கேபினட் அமைச்சர்களாக வளம் வந்தவர்கள்.   இவர்களின் திருவிளையாடல்களையும் பாரக்க வேண்டும்.     ‘முன்பு மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டதைப்போலத்தான் தயாநிதி மாறனுக்கும் பி.எஸ்.என்.எல் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், மற்றவர்கள் அந்த இணைப்பை நீட்டித்து தங்களின் குடும்ப நிறுவனங்களுக்கும் வர்த்தக நோக்கத்துக்கும் பயன்படுத்த​வில்லை​யே? இவர், அதைச் செய்துள்ளாரே… பூமியில் பள்ளம் தோண்டி, ரகசியமாக கேபிள்கள் பதித்து தன் வீட்டில் ரகசியமாக ஒரு டெலிபோன் இணைப்பகம் அமைத்து, அதில் 323 இணைப்புகளைக் கொடுத்து, அதன்மூலம் சன் டி.விக்கான டேட்டாக்களை தரவிறக்கம் செய்துள்ளார். ஓர் இணைப்பில் ஒரு மாதத்துக்கு மட்டும் 48 லட்சம் யூனிட் கால்கள் போய் உள்ளன. டேட்டாக்களை டவுன்லோடு செய்யாமல் ஓர் இணைப்பில் 48 லட்சம் யூனிட் கால்கள் எப்படிச் சாத்தியமாகும்? அதுபோல், 323 இணைப்புகளில் ஒரு மாதத்தில் எத்தனை லட்சம் யூனிட் கால்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும்? இவர் பதவி வகித்த 5 மாதங்களில், 323 இணைப்புகளில், ஒவ்வோர் இணைப்புக்கும் 48 லட்சம் யூனிட் கால்கள் என்றால், மொத்தம் எவ்வளவு என்று கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். இந்த முறைகேடு  ரகசியமாக  நடைபெற்ற பகிரங்க ஊழல். மற்ற அமைச்சர்கள் எல்லாம் இப்படிச் செய்தார்களா என்ன?’

                            சிபிஐ விசாரணையில் தெரிய வந்த விபரங்கள் என்ன தெரியுமா.   2437 என்று தொடங்கும் எண்ணில் 23 லைன்கள் வேலை பார்த்தன.   24372211 முதல் 2213, 24372222, 24372233, 24372244 முதல் 2246 என்று மொத்தம் 23 லைன்களும், 24371500 முதல் 24371799 என்ற 300 லைன்களும் இந்த எக்சேஞ்சில் செயல்பட்டன. ஒரு எக்சேஞ்ச் என்றால் அதில் பலருக்கும் இணைப்பு இருக்கும்தானே ? ஆனால் இப்படியொரு எக்சேஞ்ச் செயல்படுவது தொலைபேசித் துறைக்கே தெரியாது. பிஎஸ்என்எல்லின் தலைமைப் பொது மேலாளரைத் தவிர வேறு யாருக்குமே இந்த 323 இணைப்புகள் இருந்தது தெரியாது. 28 மே 2007ல் மாறன் பதவியை ராஜினாமா செய்ததும், 24371515 மற்றும் 24371616 ஆகிய இரண்டு எண்களை மட்டும் எம்.பி ஒதுக்கீட்டின் கீழ் தனக்கு ஒதுக்குமாறு தயாநிதி மாறன் வேண்டுகோள் விடுத்தபிறகே, இந்த 323 இணைப்புகள் குறித்த விபரங்கள் வெளி வந்தன. இந்த இரண்டு எண்கள் பிஎஸ்எஎன்னில் கிடையாது.   மாம்பலம் இணைப்பகத்தை தொடர்பு கொள்ளவும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.   பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கே தெரியாத ஒரு எண், மாறனின் வீட்டில் எதற்காக செயல்பட வேண்டும் ? 24371500 என்ற எண், 3/1 போட் கிளப் சாலை என்ற முகவரியில் தலைமைப் பொது மேலாளர் பெயரில் 300 துணை இணைப்புகளோடு செயல்பட்டு வந்ததே அப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்தது. சின்ன கேடி தயாநிதி மாறன் ராஜினாமா செய்த ஐந்து வாரத்துக்கு இந்த சட்டவிரோத இணைப்புகள் செயல்பட்டு வந்தது கவனத்துக்கு வந்தது.

              தயாநிதி மாறன் 24371515 மற்றும் 24371616 ஆகிய எண்களை தனக்கு வேண்டும் என்று கேட்டபடி, அதைஒதுக்க வேண்டுமென்றால் 24371500 என்ற எண் செயல்பட்டு வந்ததை மறைத்தே ஆக வேண்டும். ஏனென்றால் அதன் துணை இணைப்புகளான 300 எண்கள் இருந்தது தெரிய வரும் என்று பிஎஸ்என்எல் ன் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 300ஐ தவிர்த்து மேலும் 23 இணைப்புகள் தலைமைப் பொது மேலாளரின் பெயரில் மாறன் வீட்டில் செயல்பட்டு வந்தன. அந்த 23ல் 2 சாதாரண எண்கள்.   அவற்றில் 7 எண்கள் உயர் அழுத்த இணைப்பு எண்கள். அந்த ஏழு எண்களுக்கும் தனித்தனியாக மூன்று மூன்று துணை இணைப்புகள் உள்ளன என்று சிபிஐ கண்டுபிடித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே தற்போது சன் டிவி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                போகுமிடமெல்லாம்,  அ.இ.அ.தி.மு.க. வின் ஊழல்கள் பற்றி  கேள்வி கேட்பதும்,   பகிரங்கமாக சவால் விடுவதுமாக  பிரச்சாரம் செய்யும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்,  ஒரு நாள் கூட  பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த போது நடந்த ஊழல்கள் பற்றி வாய் திறக்கவில்லை.   இது தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும்  ஊழல் மற்றும் மோசடிகள் அரங்கேற்றப்படும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.   ஆகவே  தி.மு.க.விற்கு வாக்களிக்க கூடாது என்பதற்கு முக்கியமான காரணம் ஊழல் பேர்வழிகள் என்பதும்,  ஆட்சிக்கு வரும் முன்பே  மிரட்டல் விடுவதும் இவர்களின்  குணாதிசயங்களில் ஒன்றாகும்.   ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்து 10 ஆண்டு கால ஆட்சியில் நடந்த ஊழல்கள்  மற்றும் காங்கிரஸ் கட்சியினர்  நடத்தி ஊழல்களின் பட்டியல்.  இதற்கு ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.

                       ஊழலின் தொடர்கதையை  பற்றி பார்க்கலாம்   –   திருவாளர்  ஸ்டாலின் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் நடத்தும் திருவிளையாடலில்,  தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் செய்த ஊழல் பட்டியல்களை பற்றி வாய் திறக்க மாட்டேன்  என்கிறார்.   தப்பித் தவறி கேள்வி கேட்டால்,  நீ  வேலுமணி அனுப்பிய ஆளா என பதில் கூறுவதற்கு  மாறாக பேசுகிறார்.   இவரின் பார்வைக்கு வைப்பதை விட,  மற்றவர்கள் காங்கிரஸ் ஆண்ட 10 வருடங்களில் நடந்துள்ள  மோசடிகளை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

                ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள்  –        2004-ம் வருடம் முதல் 2013-ம் வருடம் வரை இந்திய திருநாட்டை ஆட்சி செய்து வருவது காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாகும்.  இதில் செய்துள்ள ஊழல்களின் எண்ணிக்கை பட்டியல் போடுவதுடன், சில முக்கியமான ஊழல்கள் பற்றி மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை கூறுவதையும் பார்க்க வேண்டும்.  முக்கியமாக வெளியே விவாதிக்கப்படும் ஊழல்கள் (1) 2ஜி அலைக் கற்றை ஊழல், (2) நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் (3) காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நடந்துள்ள ஊழல் (4) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் (5) ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல் (6)ஆந்திரக்ஸ் தேவாஸ் ஊழல் (7) பங்கு சந்தை ஊழல்  போன்ற ஊழல்களும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தயாவால் கூட்டணி கட்சியினர்  குறிப்பாக தி.மு.க.வினர் அடித்த கொள்ளைகள் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் அடித்த கொள்ளைகளும் உண்டு. 

(தொடரும்)

முந்தையப் பதிவு: பாகம்-1

Previous Post

இந்திய-மங்கோலிய உறவு: புத்த மதத்தைப் பற்றிய ஒரு பின்னோக்கிய பார்வை- பாகம் -2

Next Post

செந்தமிழும் நாப்பழக்கம் – 12

ஈரோடு சரவணன்

ஈரோடு சரவணன்

Next Post
செந்தமிழும் நாப்பழக்கம் – 12

செந்தமிழும் நாப்பழக்கம் - 12

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

August 27, 2020
பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள்

January 1, 2021
முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம்  வெறும் கனவு தான்!

முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம் வெறும் கனவு தான்!

October 27, 2021
‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

January 14, 2021
பாரதிய கல்வி (பகுதி – 5)

பாரதிய கல்வி (பகுதி – 5)

11
பாரதிய கல்வி (பகுதி-1)

பாரதிய கல்வி (பகுதி-1)

10
ஊர் கூடித் தேரிழுப்போம்..

ஊர் கூடித் தேரிழுப்போம்..

10
தாகம் தணிக்குமா கானல்நீர்

தாகம் தணிக்குமா கானல்நீர்

7
ஜெய் ஸ்ரீராம் !

ஜெய் ஸ்ரீராம் !

January 22, 2024
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023

Recent News

ஜெய் ஸ்ரீராம் !

ஜெய் ஸ்ரீராம் !

January 22, 2024
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023
சஞ்சிகை108

© 2022 sanjigai 108

Navigate Site

  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

© 2022 sanjigai 108