• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
சஞ்சிகை108
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
சஞ்சிகை108
No Result
View All Result
Home வரலாறு

சின்ஜியாங் இந்திய உலகின் ஒரு பகுதியாக இருந்த போது…. பாகம்-4

Dr.சுபாஷ் காக் by Dr.சுபாஷ் காக்
April 12, 2021
in வரலாறு
0
சின்ஜியாங் இந்திய உலகின் ஒரு பகுதியாக இருந்த போது…. பாகம்-4
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare in Whatsapp

காஷ்மீரும் கோட்டனும்

இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய உலகில் நடப்பது போல் வலிமை மிக்க அறிவுசார் நடப்பு இருந்து வந்தது. பௌத்த மதக்கொள்கையான’அனத்த ‘(அனாத்மா)”சுயமற்ற,” அல்லது  நிரந்தரத்தன்மை என்னும் போதனை,  சுய விடுதலை ஒரு மாயை  ஆகியன இவ்வாறான கேள்விகளுக்கு வழி வகுத்தது: தனி மனிதனுக்கு எது தொடர்ச்சியான உணர்வை கொடுக்கிறது? அகமுவந்த விருப்பு என்பது உள்ளதா? இதே பாணியில் குறைப்புவாதம் மற்றும்  பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த நவீன அறிவியல், நனவின் நிகழ்வில் அதிகரிக்கும் அறிவியல் ஆர்வத்தை இயக்கும் அகமுவந்த விருப்பை விளக்க இயலாது.

‘அனத்த’ என்னும் கோட்பாடு வேத கலாச்சாரத்தின் பின்னணியில் எழுந்ததாகும். இது அடிப்படை நிதர்சனமாக அகமுவந்த விருப்பு என்னும் பிரச்சனையில் பாதிக்கப்படவில்லை ஏனெனில்  இது உண்மையின் அடிப்படையில் ஆத்மா அல்லது சுய உணர்வை ஏற்றுக்கொள்கிறது  ;மேலும் இருவகை அறிவு பற்றி பேசும் போது,  மேல்நிலை என்பது சுய அனுபவத்தைக் குறிப்பது,கீழ்நிலை என்பது கவனிக்கப்படும் பொருள்களைக் குறிப்பது.  நிதரசனத்தை மேலும் அறிந்து கொள்ளக்கூடிய நிறைவான அறிவாற்றலை அளிக்கக்கூடிய பலவகை தரிசனங்களின் பாவனைகளை வேத கலாச்சாரம் ஒன்று சேர்க்கிறது.  நிச்சயமாக இது வேறு விதமான கேள்விகளையும் முரண்பாடுகளையும் கொணர்கிறது,  அதாவது, எவ்வாறு ஒரு தனிமனிதன் தனது சொந்த தன்மையை மறக்க முடியும் போன்ற கேள்விகளாகும்.  ஆனால் வேத கலாச்சாரத்திற்கு  சாதாரண பகுத்தறிவைத் தாண்டி ஒரு பிரிவின் அடிக்கோள்  தேவைப்படுகிறது. இதைதான் புத்தர் தவிர்க்க முயல்கிறார்.

‘அனத்த’ என்னும் பௌத்த கருத்திற்கு தர்க்க சாஸ்திரத்தை தருவிக்க சர்வாஸ்திவாதா என்னும் பள்ளி எழுந்தது. இந்த பள்ளியின் பெயர் சமஸ்கிருத ‘சர்வம் அஸ்தி’ என்பதிலிருந்து வந்தது. அதாவது ‘எல்லாம் இருக்கிறது/எல்லாமும்,’ என்பதாகும்.  உலகளாவிய உருபொருள் யாவும்    தற்காலிகமாக ஒன்று  சேர்ந்து  ஒரு மனிதனின் வாழ்வினை  உருவாக்குவதே  தர்மங்கள். அது  நிரந்தரமானது என்று அப்பள்ளி ஊகித்தது. வரம்புகளை  கொண்டிருந்தாலும்,  இந்த கருத்து  சக்கரவர்த்தி கனிஷ்காவின் ஆட்சியின்போது காஷ்மீரின்  புகழ்மிக்க சபையில் மிகவும் பிரபலமானது.  மேலும்  இந்தியாவில்  மட்டுமன்றி மத்திய ஆசியாவிலும் செல்வாக்குடன் இருந்தது.

‘சர்வாஸ்திவாதா’வின் கோட்பாடுகள் நாகார்ஜுனாவின் ‘மத்யமகா’வுடன், நடு பாதை,போட்டியிட வேண்டியிருந்தது.  அதன்படி ஆழமான நோக்கில்,  நிதர்சனம் என்பது ‘சூன்யதா’அல்லது வெறுமை என்பதாகும். தன்னிலை என்பது வெறுமையில் கணிக்கப்பட்டிருப்பதால், நிகழ்வுகள் என்பது மற்ற நிகழ்வுகளோடு தொடர்பு கொண்டால் மட்டுமே உளதாய் இருக்க முடியும்.  மற்றும்  ஏதேனும் ஒன்று இருக்கிறது அல்லது  இல்லாதிருக்கிறது என்று கூறுவது தவறாகும்.  நடுநிலையானது உறூதிப்படுத்தலுக்கும் மறுத்தலுக்கும் இடையில் இருப்பதாகும்.

மஹாயானா   பௌத்த குணம் என்னும் கருத்தைக் கொண்டு வந்தது. இது உலக உயிர்களுக்கெல்லாம் அடிப்படையான இயல்பு. விமர்சகர்கள்  நோக்கில், மஹாயானா ‘ஆத்மன் ‘ என்பதை மறைமுகமாக கொண்டு வந்தார். ஆனால் இதை அரை மனதோடு மட்டுமே செய்ய முடிந்தது ஏனெனில் இது தன்னிலை என்பது தன்னாலானது என்னும் சாத்தியத்தை  அனுமதிக்காது.

இறுதியில் மஹாயானா சீனாவில் வெற்றியடைந்தது என்பதை நாம் அறிவோம்.  இந்த வெற்றிக்கு பின்னால் இருந்த தனிநபர் குமாரஜீவா. இவர் முதன்மையாக அடிப்படை மத புத்தகங்களை சமஸ்கிருதத்தில் இருந்து சீன மொழிக்கு  மொழிபெயர்ப்பவராக  அறியப்பட்டார்.அவர் வாழ்க்கை பற்றிய  பெரும்பாலான பொருள் பிரபலமான துறவிகள் வாழ்வைப் பற்றி,’ காவ்செங் சுவான்,’ இல் இருந்து பெறப்பட்டது. இது 530இல் தொகுக்கப்பட்டது.

குமாரஜீவா

குமாரஜீவாவின் தந்தை குமாராயனா ஒரு பிரபலமான காஷ்மீர குடும்பத்தில் இருந்து , தூர தேசங்களில் பெரும் செல்வத்தை தேடும் பொருட்டு தனது வீட்டைத் துறந்து  துறவியானார்.அவருடைய பாதை சின்ஜியாங்கின் தரிம் பள்ளத்தாக்கின் வட எல்லையில் குச்சாவிற்கு இட்டுச் சென்றது. அந்நாட்டு அரசர் குமாராயனாவைப் பற்றி அறிந்து அவரது பயணத்தை முடித்துக் கொள்ள இணங்க வைத்து அவரை மாநில குருவாக நியமித்தார்.

குச்சாவில் இருக்கும் போது குமாராயனா, அரசனின் தங்கை, அரசகுமாரி ஜீவாவின் மேல் காதல் கொண்டார். ஜீவா அவரளவில் ஒரு சிறந்த அறிஞராவார்.அவர்கள் மணம் செய்து காலாகாலத்தில் (344)  ஒரு மகனை பெற்று, அக்குழந்தைக்கு குமாரஜீவா என்று பெயரிட்டனர். அந்த குழந்தை அசாதாரணமான திறமையின் அறிகுறிகளைக் கொண்டிருந்ததோடு  நுட்பமான வாதங்களின் மேல் அதிக ஆர்வம் கொண்டிருந்தான்.

ஆனால் ஜீவா எதிர்பார்த்தது போல் அவர்களது திருமணம் அமையவில்லை.  எனவே அவள் கன்னியாஸ்திரியாகி தனது ஏழு வயது மகனுடன் மடத்தில் சேர்ந்தாள். இரண்டு வருடங்கள் கழித்து அவர்கள் இருவரும் பந்துதத்தா என்னும் பௌத்த குருவிடம் பயில காஷ்மீருக்கு பயணம் செய்தனர். சர்வாஸ்திவாதா பள்ளியின் புத்தகங்களோடு அச்சிறுவன் வேதங்கள்,  தர்ஷனங்கள், ஆயுர்வேதம், வானியல் மற்றும் பிற விஞ்ஞானங்கள் யாவும் கற்றறிந்தான்.

மூன்று வருட படிப்பிற்கு பின் அவர்கள் தங்கள் பிரயாணத்தை தொடர்ந்தனர். ஆனால் அவர்கள் கஷ்கர் (காசகிரி,ஒளிகளின் மலை,காசி என்றும் அழைக்கப்படுகிறது) பகுதியை கடக்கும் போது, தீட்சனிய புத்தியுள்ள அச்சிறுவனைப்பற்றி  அதன் உள்ளூர் அரசர் ஏற்கனவே அறிந்திருந்தபடியால், தாயையும் மகனையும் அங்கேயே சில காலம் தங்கிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். கஷ்கரில் இருந்த போது குமாரஜீவாவின் சர்வாஸ்திவாத நிலை அவனுக்கு மஹாயானா புத்தகங்களை பயிற்றுவித்த யர்கந்தின் அரசகுமாரன் சூர்யசோமா என்னும் குருவால் சவால் விடப்பட்டது. குமாரஜீவா, வேதங்களை  படித்திருந்தபடியாலும் தனது முந்தைய நிலையில் சுய தன்மையின் அடிப்படை பிரச்சனைகளைப் பற்றி  அறிந்திருந்தபடியாலும் மஹாயானா பொறுப்பை ஏற்று அதன் சிறந்த கலைஞனாக உருவானார்.  மஹாயானா கூற்றுப்படி, அனைத்து தர்மங்களும் உண்மையற்றது; இயக்கவியல் ரீதியாக  தர்மங்கள் வெற்றிடம் போன்றதாகும். தனது நிலையற்ற சேர்க்கையில் மட்டுமே அவை தனித்துவமான இருப்பை அனுமானிக்கும்.

தனது புதிய புரிதலில் மிகவும் ஈர்க்கப்பட்ட குமாரஜீவா இந்தியாவில் உள்ள தனது முதல் குருவாகிய பந்துதத்தாவை கஷ்கருக்கு வரஅழைத்து  விரைவில் அவரை தனது புதிய பதவிக்கு மாற்றினார். மத்யமக்கா பற்றிய விவாதங்களில் மிகவும் திறமை வாய்ந்தவரானார். எல்லா இடங்களில் இருந்தும் அறிஞர்களும் துறவிகளும் இவரிடம் பாடம் பயில வந்தனர்.

தனது மகன் ஒரு ஆசிரியனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதை அறிந்து அவன் மேலும் பல உயர்ந்த காரியங்களை செய்ய உள்ளான் என்று உறுதி கொண்டு, ஜீவா தன்னுடைய படிப்பைத் தொடர காஷ்மிரிற்கு திரும்புவதென்று முடிவெடுத்தார்; தாயும் மகனும் அதன் பின் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

(தொடரும்)

முந்தைய பதிவுகள்:பாகம்-1,பாகம்-2, பாகம்-3

மொழிபெயர்ப்பு ஆசிரியர்: நிர்மலா

Previous Post

ஜாதி ஒழிப்பும் லிண்டி விளைவும்

Next Post

தமிழக தேர்தல் பிரச்சாரங்களும், கருத்துக் கணிப்புகளும்

Dr.சுபாஷ் காக்

Dr.சுபாஷ் காக்

Next Post
தமிழக தேர்தல் பிரச்சாரங்களும், கருத்துக் கணிப்புகளும்

தமிழக தேர்தல் பிரச்சாரங்களும், கருத்துக் கணிப்புகளும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

August 27, 2020
பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள்

January 1, 2021
முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம்  வெறும் கனவு தான்!

முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம் வெறும் கனவு தான்!

October 27, 2021
‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

January 14, 2021
பாரதிய கல்வி (பகுதி – 5)

பாரதிய கல்வி (பகுதி – 5)

11
பாரதிய கல்வி (பகுதி-1)

பாரதிய கல்வி (பகுதி-1)

10
ஊர் கூடித் தேரிழுப்போம்..

ஊர் கூடித் தேரிழுப்போம்..

10
தாகம் தணிக்குமா கானல்நீர்

தாகம் தணிக்குமா கானல்நீர்

7
ஜெய் ஸ்ரீராம் !

ஜெய் ஸ்ரீராம் !

January 22, 2024
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023

Recent News

ஜெய் ஸ்ரீராம் !

ஜெய் ஸ்ரீராம் !

January 22, 2024
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023
சஞ்சிகை108

© 2022 sanjigai 108

Navigate Site

  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

© 2022 sanjigai 108