ஆரோல் ஸ்டெய்ன் தனது புகழ்பெற்ற பண்டைய கோட்டானியத்தில் இவ்வாறாக கூறுகிறார்: “இத்தகைய பிரமிப்பூட்டும் ஆதாரங்களுக்கு குறைவாகவே நம்மை தயார் படுத்த முடியும்…..பெரிய இடத்தில் எந்த இந்திய மொழியும் கலாச்சாரமும் இந்த காலத்தின் ஆரம்ப நூற்றாண்டில் இந்த பகுதியின் நிர்வாகத்திலும் அன்றாட பயன்பாட்டிலும் ஆக்கிரமித்திருக்கக் கூடும் . சமஸ்கிருத பௌத்த இலக்கியம் கோட்டானிய மொழியில் கி.பி.8ஆம் நூற்றாண்டின் இறுதிவரை படிக்கப்பட்டது என்பது நான் அகழ்வாராய்ச்சியில் கண்ட பிரஹ்மி அசல் ஆவணத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள் மூலம் எவ்வித சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது”.
தரிம் பள்ளத்தாக்கின் மம்மிகள்
1800கி.பி. யில் இருந்த தரிம் மம்மிகளின் (பதப்படுத்தப்பட்ட சடலம்) கண்டுபிடிப்பு அந்த பகுதி சமஸ்கிருத பகுதி என்னும் கருத்தை மேலும் வலுவூட்டுகிறது. பள்ளத்தாக்கின் ஆரம்ப கால மம்மிகள் பிரத்யேகமாக கௌகாசாய்டு ஆகும். அமெரிக்கரான சீன மொழி நாகரீக வரலாற்று பண்பாட்டு நூலாளர் விக்டர் எம்.மெய்ர் கூறியதாவது:” ஏனெனில் தரிம் பள்ளத்தாக்கு கௌகாசாய்டு சடலங்கள் யாவும் உறுதியாக இந்தோ-ஐரோப்பிய குடும்பங்களின் கிழக்கு பகுதியின் பிரதிநிதிகள் ஆவர். ஏனெனில் அது தங்களது தாய்நாட்டிலிருந்து விரிவடைந்த இந்தோ- ஐரோப்பிய மக்கள் மேல் ஒப்பந்தத்தை குறிக்கும் காலம் முதல் அறியப்பட்டது. அது எங்கு அமையும் என்பதை நிர்ணயிக்கும் முக்கிய பங்கை அது வகிக்கும் என்று நினைக்கப்பட்டது”.
சிலர் மம்மிகளிடையே காணப்பட்டஇளஞ்சிவப்பு மற்றும் சிகப்பு தலையை வைத்து அவற்றை ஐரோப்பாவோடு அடையாளப்படுத்தி சுட்டிக்காட்டினர். ஆனால் பல ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து மேற்கு ஐரோப்பாவிற்கு நாம் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை; பள்ளத்தாக்கின் அருகில் தெற்கில் உள்ள காஷ்மீரிலேயே நிறைய சிகப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறக் கேசமுடையவர்கள் இருந்தனர்
மரபணு ஆய்வு, அங்குள்ள மக்கள் நவீன தென் மைய ஆசிய மற்றும் இந்து சம வெளி மக்களோடும் மட்டுமல்லாது பண்டைய சாவுஹு மக்களோடும் நெருங்கிய தொடர்பு இருந்ததை குறிப்பிடுகிறது. இப்பகுதியின் ஆரம்ப கால மக்கள் இந்து சம வெளியில் இருந்து வந்தவர்கள் என்றால் இது மிக பொருந்தும். மேலும் அவர்கள் அப்பகுதியில் மரபணு சுவட்டை விட்டுச்சென்றனர்.
ஒரு நாகரிகத்தின் முடிவு
தக்லமக்கான் பாலைவனத்தால் பாதுகாக்கப்பட்ட தரிம் பள்ளத்தாக்கு பரந்த வெளி நாடோடிகளின் தாக்குதல்களில் இருந்து நீண்ட காலம் தப்பி வாழ்ந்தனர். 790ஆம் ஆண்டு முதல் 9ஆம் நூற்றாண்டின் பாதி வரை நடந்த திபெத்திய ஆட்சியில் ஏற்பட்ட சமூக மற்றும் அரசியல் கொந்தளிப்பின் போது பாரம்பரிய பௌத்த கல்வியைக் கற்பிப்பதில் தடை ஏற்பட்டது. 840இல் உள்ள நவீன கால மங்கோலியாவின் யுகுர் ககனதேவின் அழிவின் பிறகிருந்து, பௌத்த யுகுர்கள் மற்றும் இஸ்லாமிய கர்லுகர்கள் உட்பட, துருக்கிய அகதிகளின் வருகையால் மாற்றங்கள் ஏற்பட்டன.
கஷ்கரின் கிழக்கில் இருந்த பௌத்த நகரங்களின் மேல் தாக்குதலையும் ஏற்படுத்தி அவைகளைக் கைப்பற்றவும் ஆரம்பித்தவர் துருக்கிய கரக்கனித் சதுக்புக்ரா கான். இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது மாற்றான் தந்தையையும் டென்ஜெரினின் கடைசி அரசரும் தனது மாமாவுமாகிய ஒகுல்ச்சக் கானையும் கொன்றார். இஸ்லாமிய கஷ்கர் பல ஜிஹாத்துகளை தொடங்கி வைத்தார். இது கடைசியில் கரகனித் கான் யூசுப் காதிரால் 1006ஆம் ஆண்டு கோட்டானின் கைப்பற்றலில் முடிவடைந்தது.
ஒரு நாகரிகத்தின் முடிவு ஒருவரை வாழ்க்கையின் அனுமானங்களைப் பற்றி கேள்வி கேட்க செய்கிறது. நிலையற்ற காதல் மற்றும் இதயவலியையும் தாண்டி, அறிஞர்கள் விவாதிப்பது போல, யாரேனும் இதை பரிகல்பமாகவும் (தவறான ஆனுமானம்) சூன்யதாவாகவும் பார்ப்பதில்லையா? தத்துவவாதத்திற்கும் மோசமாக ஐயுருவதற்கும் நேரமில்லை. சந்ததிகளை பாதுகாக்கும் நோக்கோடு குகைகளில் பாதுகாப்பிற்காக அடைக்கப்பட்ட புத்தகங்களை கோட்டானிய அரசர்கள் விஷ ஷுரா (966-977) மற்றும் விஷ தர்மா(978முதல்) ஆகியோரது ஆட்சியின்போது இருந்த துறவிகள் நகல் எடுக்க ஆரம்பித்தார்கள். உலகின் மற்ற பகுதிகளில் நடந்தது போல ஒரு அழிவு மற்றும் காழ்ப்புணர்ச்சி மிகுந்த காலம் தொடர்ந்தது.
இதன் முடிவில், அதன் மக்கள் தங்களது மொத்த கடந்தகாலத்தின் நாடகத்தை தக்க வைத்துக் கொள்ளவில்லை. மம்மிகள் மற்றும் அதன் இலக்கியங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை தங்களது மூதாதையர்கள் இந்திய ப்ரக்ரித் மொழிகள் பேசினர் என்பதை அவர்கள் அறியவில்லை.
ஆரம்ப நாகரிகத்தின் முடிவு கரகனிடின் அறிஞர் மற்றும் சொற்களஞ்சிய ஆசிரியருமாகிய முகமது அல்-கஷ்காரி(11ஆம் நூற்றாண்டு) அவர்களால் ஒரு சிறிய கவிதையில் கொண்டாடப்படுகிறது:
“ நாம் அவர்கள் மேல் வெள்ளமாக சூழ்ந்தோம்,
நாம் அவர்கள் நகரங்களுக்குள் சென்றோம்,
நாம் அவர்கள் சிலைக் கோவில்களை உடைத்தோம்,
நாம் அவர்கள் புத்தரின் சிரசின் மேல் அமங்கலப் படுத்தினோம்!”
கோட்டானிய மக்கள் ஆரம்பத்தில் துருக்கிய மொழி பேசவில்லை என்று கஷ்கரி உறுதிப்படுத்துகிறார். திபெத்தைப் பற்றியும் கோட்டான் பற்றியும் இவ்வாறு கூறுகிறார்: “திபெத் தனக்குரிய மொழியைக் கொண்டுள்ளது. கோட்டானும் தனக்குரிய தனி எழத்துப்படிவமும் மொழியையும் கொண்டுள்ளது. ஆனால் இந்த இருவரும் துருக்கிய மொழியை அறிந்திருக்கவில்லை.” முன்பு குறிப்பிட்டது போல் இந்த மக்கள் தங்களை தற்போது யுகுர்கள் என்று அழைக்கின்றனர்.
சின்ஜியாங்கின் சில பகுதிகளில் புத்தமதம் மேலும் சில காலம் பிழைத்திருந்தது. 1390களில் கோச்சோ மற்றும் துர்ஃபான் அரசுகள் ச்சகதாய் அரசர்கள் க்ஸிர் க்வஜாவால் தாக்கப்பட்டன. ஆனால் புத்தமதம் 1450கள் வரை தனது இருப்பை தக்கவைத்தது. 1516 இன் இறுதிவரை காரா தேய் அரசு ச்சகதாய் கான் மன்சூரால் புனித போரில் ஈடுபட்டிருந்தது. இந்த காலத்தில் தான் வட இந்தியாவை கைப்பற்ற பாபர் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்.
ஒருவேளை தங்களுடைய சொந்த வரலாற்றை பற்றிய அவர்களின் மறதி தான் சின்சியாங்கிலும் அதன் அண்டைபகுதிகளிலும் அவர்களது தீர்க்கப்படாத நிலைக்கு காரணமாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக,19ஆம் நூற்றாண்டின் இறுதியில் துன்கன் கலவரம் என்று கூறப்பட்ட மோதல் ஷாங்க்சி மற்றும் கன்சு மாகாணங்களில் நடந்த கொலைகள், போர் மரணங்கள் மற்றும் இடம்பெயர்வு காரணங்களால் 20மில்லியன் மக்கள் இழப்பில் முடிவுற்றது.
11ஆம் நூற்றாண்டில் மதிலமைக்கப்பட்ட மோகோ குகைகளில் இருந்த ஆவணங்கள் 1900இல் கண்டுபிடிக்கப்பட்டப் பிறகு யுகுர்களின் கடந்த கால வரலாறு வெளிச்சத்திற்கு வந்தது.
(தொடரும்)
முந்தைய பதிவுகள்:பாகம்-1,பாகம்-2
மொழிபெயர்ப்பு ஆசிரியர்: நிர்மலா














