உத்திர பிரதேச முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த சாஹிப்ஜாதா தினம் என்ற சீக்கிய தியாக தின வழிபாடு.
இதில் என்ன விசேஷம் என்று கேட்பவர்களுக்கு – 2017ம் ஆண்டு வரை உத்திரபிரதேச முதல்வர் இல்லத்தில் இஃப்தார் நோன்புகளும், ஈத் விருந்துகளும் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. யோகி முதல்வராகப்பதவியேற்ற பின்னர் மட்டுமே சாஹிப்ஜாதா போன்ற தியாக தின வழிபாட்டு தினங்கள் அனுசரிக்கப்படுகின்றன.
அது என்ன சாஹிப்ஜாதா தினம்?
சீக்கியர்களின் 9வது குரு தேஜ் பகதூர் சிங். தர்மமும் வீரமும் ஒருங்கிணைந்த தெய்வப் பிறவி. இந்துக்களையும் சீக்கியர்களையும் மதம் மாற வற்புறுத்திய, வெறிபிடித்த “பேரரசர்” ஔரங்கசீபை வன்மையாக எதிர்த்தவர். ஷரியா சட்டத்தை அமல்படுத்தியிருந்த ஔரங்கசீப் அவரைப் பிடித்துத் தூக்கிலிட்டுக் கொன்றான். அடுத்த குருவாக அவரது மகன் 9 வயதே நிரம்பிய தெய்வீகக் குழந்தை குரு கோவிந்த் சிங் பொறுப்பேற்றார். தந்தை வழியில் அவரும் ஹிந்துக்கள் மற்றும் சீக்கிய சமூகத்திற்கு அரணாக விளங்கினார்.
அவருக்கு 4 மகன்கள். அவரது இரண்டு மகன்கள் (13 வயது மற்றும் 17 வயது) போரில் கொல்லப்பட்டனர். 6 வயது மற்றும் 9 வயதான அவரது மற்ற இரு மகன்களை வாசிர் கான் என்ற தளபதி கைதியாக பிடித்து கொடூர சித்திரவதைகளைச் செய்து துன்புறுத்தினான். இஸ்லாத்திற்கு மாற வற்புறுத்தினான். ஆனால் அந்த இளம் குருத்துகள் உறுதியாக மறுத்து விட்டன. ஆத்திரமடைந்த வாசிர் கான் அவர்களை உயிருடன் பாழும் கிணற்றில் தள்ளி அதனைக் கற்களைக் கொண்டு மூடி கொன்றான்.
குரு கோவிந்த் சிங் அவர்களின் நான்கு வீரப் புதல்வர்களின் தியாகத்தைப் போற்றி வணங்கும் திருநாளே சாஹிப்ஜாதா.














