ஐந்தே வருடங்களில் முடிக்க வேண்டியதை பத்து வருடங்களில் முடிப்பாராம்!
திமுக ஆர்மி ஜெனரல் தான் பொருளாதார புலியென நினைத்து கொண்டு சீனாவில் மாவோ 1960களில் செய்த “The Great Leap Forward “எனும் “பெரும் பாய்ச்சலை நோக்கி” என அறிவித்தது போல் ஒரு அறிவிப்பினை செய்துவிட்டார்.
அது அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை GSDP இலக்கினை 35லட்சம் கோடி பொருளாதாரமாக மாற்றுவோம் என்பதுGSDP என்பது மாநில உற்பத்தி அடைவுநிலையினை குறிக்கும் அளவுஇது கடினமான இலக்கு என்றாலும் இதுவரை எந்த மாநிலமும் எட்டியதில்லை.
அதே நேரம் சில வருடங்களில் மகராஷ்ரா அதை அடையலாம். அதே நேரம் தமிழகத்துக்கும் வாய்ப்பு உண்டு.தமிழகத்தில் GSDP இந்திய ரூபாயின் மதிப்பில் தற்போது 21.73 லட்சம் கோடி. அதன் வளர்ச்சி விகிதம் 13.23%. ஆம், என்னதான் சொன்னாலும் பழனிச்சாமி அரசின் மிகபெரிய சாதனை இது.
அனுபவமே இல்லாத ஒரு அரசு அந்த சாதனையினை செய்தது.இது இரண்டாம் சாதனை.இவ்விஷயத்தில் முதல் இட சாதனை அதிமுக வசமே உள்ளது. ஆம், 2001-2005 ஜெயலலிதா ஆட்சியில் 15% என்ற உச்ச நிலையை தமிழகம் அடைந்தது, இன்றுவரை அதுதான் சாதனை.
இந்திராகாந்தி ஆதரவு, விபி சிங் ஆதரவு, முரசொலிமாறன் தொழில்துறை அமைச்சராக இருந்த காலம், மன்மோகன் சிங் எனும் மிக மிக தோதான காலங்களில் திமுக கிழித்த எவ்வளவு என்றால் 6.13, 5.45, 10.83, 13.10, 7.39 என்ற விகிதத்தில் தான் இருந்துள்ளது. இதில் திமுகவின் 13.10 எனும் அடைவு நிலை ஜெயா செய்த 15% எனும் சாதனையின் நீட்சி அல்லது திமுகவால் ஏற்பட்ட பின்னடைவு.
இப்பொழுது அதாவது பழனிச்சாமி ஆட்சியில் விகிதம் 13.23%, அதாவது இப்பொதைய அடைவு நிலை 21.73 trillion இது இப்படியே தொடர்ந்தால் என்னாகும்?
2021 21.73 ல் trillion,
2022ல் 24.6 trillion,
2023ல் 27.85 trillion,
2024ல் 31.53 trillion,
2025ல் 35.7 trillion.ஆம், 2025ம் ஆண்டே முக ஸ்டாலின் சொன்ன இலக்கை எட்டிவிடலாம்.
அது போக அது அப்படியே தொடர்ந்தால் என்னாகும்? இப்படி தொடரும்.
2026ல் 40.42 trillion,
2027ல் 45.76 trillion,
2028ல் 51.81 trillion,
2029ல் 58.66 trillion,
2030ல் 66.42 trillion.
அதாவது 2030ல் அடைவு நிலை 66.42 trillion GSDPஆக பழனிச்சாமி அரசு 2025லே எட்டும் அடைவு நிலையினை இவர் 2030ல்தான் எட்டுவாராம்.
இதற்கு தமிழகம் வாக்களிக்க வேண்டுமாம்.ஆனாலும் ஒரு உண்மையினை ஒப்புகொண்ட அவரின் நல்ல மனதுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தாக வேண்டும்.ஆம் பழனிச்சாமி அரசு 5 வருடத்தில் செய்யும் சாதனையினை நாங்கள் எங்கள் ஊழல், பலவீனம், இயலாமை, கட்சி தகறாறு, குடும்ப சண்டை, சுரண்டல் என எல்லாமும் தாண்டி செய்ய 10 வருடமாகும் என ஒப்புகொண்டார் அல்லவா? அது வாழ்த்துகுரியது.
நல்ல அரசியல்வாதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், தொடரட்டும் அவரின் ஒப்புதல்கள்.














