கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் உற்பத்தி செயல்பாடு சென்ற எட்டரை ஆண்டுகளில் மிக உயர்ந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக IHS Markit India எனும் தொழில் வளர்ச்சி குறியீட்டை பதிவு செய்யும் அமைப்பு கூறியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இரண்டாவது முறையாக இந்தியாவின் உற்பத்தித் துறை முன்னேற்றம் அடைந்ததுடன், புதிய ஆர்டர்கள் மற்றும் உற்பத்தியில் விரைவான அதிகரிப்புகளால் எட்டு மற்றும் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலான உயர்வைத் தொட்டது, இந்த நிலைமை நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தாலும் கூட, ஒரு மாத கணக்கெடுப்பில் பெற்ற புள்ளிவிவரங்கள் உயர் வளர்ச்சியை காட்டியுள்ளன.
ஐ.எச்.எஸ். மார்கிட் இந்தியா கண்காணித்து வரும் (Purchasing Managers’ Index (PMI) உற்பத்தி கொள்முதல் மேலாளர்களின் குறியீடு கடந்த ஆகஸ்டில் 52.0 லிருந்து செப்டம்பர் மாதத்தில் 56.8 ஆக உயர்ந்தது. இந்த குறியீடு ஜனவரி 2012ல் இருந்த குறியீட்டை விட அதிகபட்சமாகும்.
“இந்திய உற்பத்தித் துறை தொடர்ந்து சரியான திசையில் நகருவதை தொடர்ந்து செப்டம்பர் மாதத்திற்கான பிஎம்ஐ தரவு ஒரு நேர்மறையான வளர்ச்சியை காட்டுகிறது. கோவிட் -19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், தொழிற்சாலைகள் உற்பத்தியை நோக்கி முழு வேகத்துடன் முன்னேறின. புதிய உற்பத்தியில் எழுச்சி காணப்பட்டது” என்று கூறுகிறார் பொலியானா டி லிமா.
“உற்பத்திக்கான புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் வலுவான வளர்ச்சி இருந்தபோதிலும், இந்திய பொருட்கள் உற்பத்தியாளர்கள் ஊதியக் குறைப்பை செய்ய வேண்டியதாயிற்று. சமூக விலகல் வழிகாட்டுதல்களைக் கண்காணிப்பதற்கான முயற்சிகள் தான் இதற்குக் காரணம். இதன் காரணமாக தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துள்ளது.”
“உற்பத்திச் செலவுகள் என்று பார்த்தால், அவை கூடியுள்ளன. காரணம் மூல இடுபொருட்களின் விலை கூடியுள்ளதுதான். சாதகமானவகையில் பார்த்தால் வரவிருக்கும் 12 மாதங்களில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு உற்பத்தியாளர்கள், உற்பத்தி வளர்ச்சியை எதிர்பார்க்கிறார்கள். இதன் காரணமாக கணக்கிடப்பட்டிருக்கும் 8 சதவிகித சுணக்கத்தை விட உற்பத்தி வளர்ச்சி சற்றே சாதகமாக இருக்கலாம் என்று நம்ப இடமிருக்கிறது.
“2020-21 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பி.எம்.ஐ சராசரியைப் பார்க்கும்போது, கோவிட் -19 தொற்றுநோய் குறித்த நிச்சயமற்ற நிலை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கூட முதல் காலாண்டில் காணப்பட்டதற்கு மாறாக 35.1 முதல் 51.6 வரை பதிவாகி உள்ள வளர்ச்சியைப் பார்க்கும் போது உற்பத்தியாளர்கள் இனிமேல் குறைந்தபட்சம் மீட்சியை காணமுடியும்” என்று லிமா கூறினார்.
நன்றி: ஸ்வராஜ்
மொழிபெயர்ப்பு ஆசிரியர்: அஷ்வின் ஜி














