‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என வள்ளலார் வகுத்த ஜீவ காருண்யம் தோன்றியதும் இந்த தேசம் தான்.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்ற கோட்பாடு உருவானதும் இங்கு தான்! மாட்டிறைச்சியைத் தவிர்க்கலாமே என்ற கோரிக்கைக்கு ‘ என் உணவு என் உரிமை’ என முழங்கியதும் இங்கே தான்.
உரிமை மறுப்பதற்கில்லை.
அதே போல் தான், நாம் என்ன மாதிரியான உணவை உண்கிறோம் என அறியும் உரிமையும் நமக்குண்டு.
அதையொட்டித் தான் தெற்கு தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தங்களது எல்லைக்குள் செயல்படும் அசைவ உணவகங்களுக்கு ஒரு புதிய ஆணை பிறப்பிக்கவுள்ளது. தாங்கள் விற்கும் இறைச்சி ஹலால் முறையில் தயாரித்ததா அல்லது ஜட்கா முறையிலா என தெரிவிக்கவேண்டும். இஸ்லாமியர் ஹலால் உணவை உண்பர்.
ஆனால் ஹிந்து மற்றும் சீக்கிய மதம் ஹலால் முறையில் மிருகங்களைக் கொல்வதைப் பாவமாகக் கருதுகிறது
எனவே தான் இந்த அறிவிப்பு அவசியமாகிறது.
தெற்கு தில்லி வட்டாரத்தில் 90% ஹோட்டல்களில் அசைவம் உண்டு. அதனால் ஹலால்/ஜட்கா எனக் குறிப்பிட்டால் மக்கள் தங்களுக்கான உணவைத் தேர்ந்தெடுக்க வசதியாக இருக்கும். இதுவரை அந்த விபரம் குறித்த சர்ச்சை எழவில்லை எனினும், ஹிந்து சீக்கிய கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு தேவைப்படுகிறது.
இதில் உணரவேண்டியது என்னவென்றால் ஹலால் உணவு நிறுத்தப்படவில்லை. எப்போதும் போல் ஹலால், ஜட்கா இரண்டும் கிடைக்கும். கஸ்டமர்களுக்கு தங்கள் உணவைத் தேர்ந்தெடுக்க வசதி செய்து தருவதே எண்ணம். இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்த சட்டர்பூர் கௌன்சிலர் அனிதா தன்வர் கூறுகையில் யாருடைய உணவு வழக்கத்தையும் மாற்றவோ தடை போடவோ எண்ணமில்லை. மாறாக எல்லா மதக் கொள்கைகளையும் மதிக்கும் எண்ணம் தான் காரணம் என்றார்.
எல்லா உணவகங்களும் சுகாதார வாணிப உரிமம் அந்தந்த கௌன்சிலரிடமிருந்து வாங்கும் போதே இது அறிவுறுத்தப்படும்.
ஆனாலும் பல உணவகங்கள் செயல்படுத்துமா என்பது கேள்விக்குறி. சுமார் 2000 ஹோட்டல்களை கண்காணிப்பதும் கடினம் என்கிறார் SDMC அதிகாரி ஒருவர். காரணம் இது தான். எந்த முறை தயாரிப்பு என விளக்கினால் மக்கள் வருகை குறைய வாய்ப்புள்ளது.
ஐரோப்பிய யூனியனில் கூட இந்த விவாதம் நடந்து இறுதியில் ஹலால், கோஷர் முறையில் மிருகங்களை துடிதுடிக்கக் கொல்வது கூடாது என மனித நேய அடிப்படையில் முடிவு செய்தனர்.
Jhatka certification authority Chairman Ravi Ranjan Singh இந்தச் சர்ச்சை குறித்து விளக்குகிறார். ஹலால் முறை என்பது அரேபிய முறையில் மிருகங்களைக் கொல்வது. இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. அதுவே பிற மதத்தினருக்கு ஏற்புடையதாகாதே! அதைத் தான் உண்ணவேண்டும் என வற்புறுத்தவும் முடியாதே. உணவகங்கள் ஹலால் இறைச்சி மட்டுமே விற்பனை செய்வது பிற மதத்தினரைப் புண்படுத்துவதாகாதா?
ஜட்கா முறையில் மிருகங்களுக்கு வலியில்லா மரணம் ஏற்படுகிறது. தண்டு வடம்- மூளை இணைப்பை ஒரே நொடியில் வெட்டி மரணம் ஏற்படுத்துதல் தான்.
ஹலால் முறையில் கொஞ்சம் கொஞ்சமாக வலியால் துடித்து இறக்கிறது மிருகம்.கழுத்து நரம்பை அறுத்து ரத்தம் சொட்டச் சொட்டக் கொல்வதே ஹலால்.
மக்களுக்கு உணவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தருகிறோமே தவிர ஹலால் உணவைத் தடை செய்யவில்லை. அதே சமயம் ஹலால் மட்டுமே வழங்கப்படுவதும் தவறல்லவா என்றார் சிங்.
இந்திய பாராளுமன்றம், ரயில்வே எல்லாம் ஹலால் மட்டுமே அளிக்கிறது. இது குறித்து 2009லேயே சிங் நாடாளுமன்றந்தில் முறையிட்டுளார் ஜட்கா உணவையும் சேர்க்கச்சொல்லி. இன்று வரை முடிவுக்கு வரவில்லை. இது இந்திய பாராளுமன்றம், இந்திய ரயில்வே தானே இஸ்லாமிய பாராளுமன்றம், இஸ்லாமிய ரயில்வே இல்லையே என்கிறார்.
நியாயமான கேள்வி.
ஹலால் முறையில் வெளியில் தெரியாத ஒரு விஷயம் அதன் மூலம் வரும் வருமானத்தில் ஒரு பகுதி ஜிகாத்துக்காகப் பயன்படுகிறது. ஆக, ஹலால் உண்பதின் மூலம் நமக்கு நாமே சாவு மணி அடிக்கிறோம் என்றார் அவர்.
ஜிகாத் என்பதே பிற மதத்தினரை தங்கள் நம்பிக்கைக்குள் இழுப்பது தானே.இதை உணவு மூலமாகவே செயல்படுத்துகின்றனர். இதை ஹலால் என்பதை விட ஹலாலோனிமிக்ஸ் அதாவது மதம் மாற்றும் திட்டம் என்றே கூறலாம் என்று ரவி ரஞ்சன் சிங் கூறினார்.













