• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
சஞ்சிகை108
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
சஞ்சிகை108
No Result
View All Result
Home வாழ்வியல்

நம்மை யாரோ கண்காணிக்கிறார்கள்!

காம்கேர் கே.புவனேஸ்வரி by காம்கேர் கே.புவனேஸ்வரி
April 8, 2021
in வாழ்வியல்
0
நம்மை யாரோ கண்காணிக்கிறார்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare in Whatsapp

நம்முடையபிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் நம் துன்பங்கள்மட்டும்தான் என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். துன்பங்கள் என்பது பணப்பிரச்சனை, கடன்தொல்லை, காதல் தோல்வி, அவமானகரமானநிகழ்வுகளில் சிக்குதல், கெளரவப் பிரச்சனை இப்படிஎதுவாக வேண்டிமானாலும் இருக்கலாம்.  

நமக்குஏற்படும் துன்பங்களினால் கஷ்டங்களும் வலிகளும் நமக்கு உண்டாவது உண்மைதான். மறுப்பதற்கில்லை. அதன் வலி எப்போதுஅதிகமாகிறது தெரியுமா? அந்த துன்பங்களை மற்றவர்கள்கவனிக்கிறார்கள் என்ற எண்ணத்தினாலேயே அவைகொடுக்கும் வலி அதிகமாகிறது.   

அதாவதுதங்களைச் சுற்றி உண்டாக்கி வைத்திருக்கும்தங்கள் ‘இமேஜ்’ எனும் மாயவலையேதுன்பங்களைப் பெருக்கிவிடுகிறது. அந்த இமேஜ் பிறர்தம்மை கவனிக்கிறார்கள் என்ற எண்ணத்தை நமக்குள்ஆழமாக விதைத்துவிடுகிறது. அந்த கவனிப்பில் நம்மைப்பற்றிய உயரிய எண்ணங்கள் மட்டுமேஇருப்பதாக நமக்குள் நம்பிக்கை விழுந்துவிடுகிறது. 

நம் துன்பங்கள் நமக்கு உண்டாக்கும் வலியைவிடஅதிகமாக இருப்பது இமேஜ் கொடுக்கும் வலிகள்தான். நம்மைப் பற்றிய மதிப்பீடு பிறர்மத்தியில் குறைந்துவிடுவதால் உண்டாகும் வலி. 

இதனால்தான்பணமும் புகழும் பெற்று உச்சத்தில்இருக்கும் தொழிலதிபர்கள் கடன்பிரச்சனையினால் சட்டென தற்கொலை செய்துகொண்டுவிடுவதைப்பார்க்கிறோம். கடன் பிரச்சனை வந்தால்என்ன? எப்படியாவது சமாளித்துவிடலாம். என்ன நடத்திக்கொண்டிருக்கும் பிசினஸை கூடவிட்டு விடலாம். எப்படியாவது அதில் இருந்து மீள்வதற்குஒரு வழி இல்லாமலா போகும். ஆனாலும் அவர்களால் அவர்கள் மீதான் இமேஜைவிட்டுக்கொடுக்க இயலாமல், அந்த இமேஜூக்கு பங்கம்வரும் எந்த சூழலையும் சந்திக்கமுடியாமல் நொடிப்பொழுதில் தற்கொலை எண்ணத்தை எடுத்துவிடுகிறார்கள். 

‘என்னஆனால்தான் என்ன… வாழ்ந்துப் பார்த்துவிடுவோம்’ என்ற துணிவைக் கொடுக்காத படிப்பும், பணமும், பதவியும், புகழும்இருந்துதான் என்ன பயன்?’ 

திபெத்தில்உள்ள பெளத்த மடாலயங்களில் மனநலம்பாதிக்கப்பட்டவர்களுக்கு நடக்கும் ஒரு சிகிச்சை முறைமிகவும் வித்தியாசமானது. 

அங்கு வரும் மனம் நலம்பாதிக்கப்பட்டவர்களை  ஒருஅறையில் வைத்து சாப்பாடு தண்ணீர்எல்லாம் வைத்துவிட்டு நகர்ந்துவிடுவார்கள். யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவரே பசித்தால் எடுத்து சாப்பிட வேண்டும். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்க வேண்டும். இதையெல்லாம் சரியாக செய்பவர்கள் கத்திஆர்பாட்டம் செய்வதையும் பொருட்களை தூக்கி எறிவதையும் நிறுத்தமாட்டார்கள். ஆனால் அவர்களை யாருமேஅந்த மடாலயத்தில் கண்டுகொள்ள மாட்டார்கள். அவரவர்கள் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருப்பார்கள். கத்தலும், கூச்சலும் சில நாட்கள் தான். அவர்களே அடங்கி மற்றவர்களைப் போலசாதாரணமாகி விடுவார்கள். 

எதிர்வினையாற்றயாரும் இல்லை என்றால் எப்படிப்பட்டவரும்அமைதியாகிவிடுவார்கள் என்கிறார்கள் திபெத்திய லாமாக்கள்.  உண்மைதானே. மற்றவர்கள் நம்மை கவனிக்கிறார்கள், மற்றவர்களிடம் நம்மைப் பற்றிய இமேஜை வளர்த்து வைத்திருக்கிறோம் என்ற எண்ணம் இருப்பதால்தான் நாம் ஏதேனும் பிரச்சனையில் சிக்கும்போது அதில் இருந்து வெளிவர யோசிப்பதைவிட மற்றவர்கள் நம்மை எப்படி நினைப்பார்கள் என்று யோசித்து யோசித்தே நம் மனதில் எதிர்மறையான அல்லது பைத்தியக்காரத்தனமான எண்ணங்கள் வளர்கின்றன. யாரும் பார்க்கவில்லை என்றாலோ அல்லது யாரேனும் பார்க்கிறார்கள் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளவில்லை என்றாலோ அது வளர்ந்துகொண்டே போகாது.

Previous Post

சின்ஜியாங் இந்திய உலகின் ஒரு பகுதியாக இருந்த போது…. பாகம்-3

Next Post

ஜாதி ஒழிப்பும் லிண்டி விளைவும்

காம்கேர் கே.புவனேஸ்வரி

காம்கேர் கே.புவனேஸ்வரி

Next Post
மதம் கடந்த ஜாதி அமைப்புகள்

ஜாதி ஒழிப்பும் லிண்டி விளைவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

August 27, 2020
பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள்

January 1, 2021
முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம்  வெறும் கனவு தான்!

முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம் வெறும் கனவு தான்!

October 27, 2021
‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

January 14, 2021
பாரதிய கல்வி (பகுதி – 5)

பாரதிய கல்வி (பகுதி – 5)

11
பாரதிய கல்வி (பகுதி-1)

பாரதிய கல்வி (பகுதி-1)

10
ஊர் கூடித் தேரிழுப்போம்..

ஊர் கூடித் தேரிழுப்போம்..

10
தாகம் தணிக்குமா கானல்நீர்

தாகம் தணிக்குமா கானல்நீர்

7
ஜெய் ஸ்ரீராம் !

ஜெய் ஸ்ரீராம் !

January 22, 2024
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023

Recent News

ஜெய் ஸ்ரீராம் !

ஜெய் ஸ்ரீராம் !

January 22, 2024
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023
சஞ்சிகை108

© 2022 sanjigai 108

Navigate Site

  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

© 2022 sanjigai 108