• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
சஞ்சிகை108
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
சஞ்சிகை108
No Result
View All Result
Home கட்டுரைகள்

தேவை சமயோஜிதம் பயம் அல்ல: மூத்த குடிமக்களின் வங்கி சேமிப்பு

சக்ரவர்த்தி மாரியப்பன் by சக்ரவர்த்தி மாரியப்பன்
January 12, 2021
in கட்டுரைகள், பொருளாதாரம்
1
தேவை சமயோஜிதம் பயம் அல்ல:                   மூத்த குடிமக்களின்  வங்கி சேமிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare in Whatsapp

அண்மையில் லஷ்மி விலாஸ் வங்கி ( DBS வங்கி) வராக்கடன் சிரமத்தில் மாட்டியுள்ள நிலையில் தனியார் வங்கிகளில் வைப்புத்தொகை முதலீடு செய்துள்ள பலரும் பொதுத்துறை வங்கிகளுக்கு தங்கள் முதலீடுகளை மாற்றுகின்றனர். தங்கள் பணத்திற்கு பாதுகாப்பு தேவை என்று அவர்கள் உணர்கின்றனர்.

இங்கு இரண்டு விஷயங்கள் முக்கிய கவனம் பெறுகின்றன.

1. தாங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த சம்பாத்தியத்தை எந்த வித சேதாரமும் இன்றி பாதுகாப்பாக காப்பாற்ற வேண்டும். அதில் ஒரு தொகையை முதலீடு செய்து அதில் கிடைக்கும் வட்டியில் இருந்து அன்றாட செலவுகளை கவனித்துக் கொள்ள வேண்டும்.

2. நமது முதலீடு வங்கி சேமிப்பு , ஓய்வூதியத் திட்டம் (பென்ஷன் ப்ளான்), நிலம், வீடு (வாடகை), தங்கம், நண்பர்கள் அல்லது தெரிந்த நபர்களுக்கு வட்டிக்கு கடன் அளிப்பது என்று ஏதோ ஒரு வகையில் அவர்கள் அறிந்து கொண்ட அனுபவம், வாசிப்பு, சிலரது ஆலோசனை, அறிவுரை அடிப்படையில் தேர்ந்தெடுக்கின்றனர்.

இங்கு LIC போன்ற நிறுவனங்களின் ஆயுட்கால ஓய்வூதிய திட்டத்தை (Annuity) தேர்ந்தெடுப்பார்கள் விகிதம் மிகக் குறைவு. அதன் வட்டியும் 5-6% வரை தான் இருக்கும்.

ஊரில் தெரிந்த நபர்கள் வழியாக ப்ளாட் வாங்கி அதனை சில ஆண்டுகள் கழித்து விலை ஏறியவுடன் விற்று லாபம் பார்க்கலாம் என்றும் சிலர் செய்வார்கள்.

வேறு சிலர் ஆபரணத் தங்கமாக வாங்கி வைத்துக் கொண்டால் பின்னாளில் அது நிச்சயம் உதவும் என்று தங்கத்தில் முதலீடு செய்வார்கள்.

பங்குச்சந்தை, பரஸ்பர நிதி, டிபெண்ட்ச்சர் போன்ற முதலீடு வாய்ப்புகளை அவர்கள் சமீப காலங்களில் சொந்த அனுபவத்தில் தேர்வு செய்யலாம்.

ஆனால் பெரும்பாலான மக்கள் தேர்வு வங்கி சேமிப்பு கணக்கு அல்லது அஞ்சலக வைப்புத்தொகை. இதில் அரசு வங்கிகள் தற்போது குறைந்த வட்டியை வழங்குகின்றன. பெரிய தனியார் வங்கிகளும் அதே போல வட்டியைக் குறைத்து விட்டன. சில சிறிய வங்கிகள், புதிதாக இயங்கும் சில ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் மட்டுமே சற்று அதிகமாக 7.5% வரை வட்டியை வழங்குகின்றன. இது பாதுகாப்பானதா? என்று பலருக்கும் கேள்விகள் எழுகின்றன.

சென்ற ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு பொது மக்கள் வங்கி சேமிப்பு கணக்கில் உள்ள வைப்புத்தொகை, சேமிப்பு கணக்கு, நடப்புக் கணக்கு, அதன் வட்டி ஆகியவற்றின் கூட்டுத்தொகை ரூ.5 இலட்சத்திற்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் அது 100% #DIGCIC எனும் டெப்பாசிட் இன்சூரன்ஸ் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் எனும் ஒரு அமைப்பு மூலம் பாதுகாக்க வழி வகை செய்து விட்டது.

இதில் ஒரு தனி நபரின் ஒரு வங்கியில் உள்ள எல்லா கணக்கில் உள்ள மொத்த தொகையும் அடங்கும். அதே வேளையில் அதே நபருக்கு வேறொரு வங்கியில் கணக்கு இருந்து அங்கும் முதலீடு இருந்தால் அதுவும் ரூ.5 இலட்சம் வரை பாதுகாப்பாகவே இருக்கும்.

வங்கிகள் திவால் ஆனால் ரிசர்வ் வங்கி தலையிட்டு இது போன்ற சூழ்நிலையில் பொது மக்கள் பணத்தை மீட்டுக் கொடுத்த வரலாறு உண்டு. ஆனால் நமக்குத் தேவை பாதுகாப்பான திட்டமிடல்.

நம்மிடம் ரூ.20 இலட்சம் ஓய்வூதியம் ரொக்கமாக வங்கியில் இருந்தால் அதனை வாழ்க்கைத்துணை பெயரில் சரி பாதியாக பிரித்து வெவ்வேறு வங்கிகளில் நான்கு ( 2 + 2) கணக்குகளில் ரூ.5 இலட்சம் வீதம் போட்டு வைக்கலாம். ஒரே நேரத்தில் நான்கு வங்கிகள் திவால் ஆகும் சூழ்நிலை இங்கு இல்லை. அதில் கிடைக்கும் வட்டியை மாதாந்திர அல்லது ஆண்டுக்கு ஒரு முறை இன்னொரு வங்கிக் கணக்கில் சேமித்து வைத்து செலவுகளை அதில் இருந்து செய்து வரலாம்.

ரிசர்வ் வங்கி அனுமதி பெற்ற வங்கிகள் ஆதலால் அதிக வட்டி தரும் சிறிய வங்கிகளும் நமது முதலீட்டுக்கும் பாதுகாப்பானவை தான். ரூ. 10 இலட்சத்தை 3.5% வட்டி தரும் பாதுகாப்பான பெரிய அரசு வங்கியில் வைப்பதற்கும், ரூ.5 இலட்சம் வீதம் 7% வட்டி தரும் இரண்டு வங்கிகளில் வைத்து பணம் ஈட்டுவதற்கும் ஓய்வுக் காலத்தில் கண்டிப்பாக பெரிய வித்தியாசம் இருக்கிறது. இங்கு ஆண்டுக்கான வருமான இழப்பு ரூ.35000. பாதுகாப்பு வரம்பு ரூ.5 இலட்சம் தான்.

தேவை விழிப்புணர்வே தவிர, பயம், தயக்கம் அல்ல. வருமானத்திற்கான வரி, அஞ்சலக வைப்புத்தொகை, பங்குச்சந்தை ரிஸ்க் ஆகியவற்றை இன்னொரு சந்தர்பத்தில் பார்க்கலாம்.

Previous Post

மேற்கு வங்க மாநில தேர்தலும் – மம்தாவின் தடுமாற்றமும்

Next Post

பார்வையாளனாக இருங்கள்

சக்ரவர்த்தி மாரியப்பன்

சக்ரவர்த்தி மாரியப்பன்

Next Post
பார்வையாளனாக இருங்கள்

பார்வையாளனாக இருங்கள்

Comments 1

  1. நா. கோவிந்தன் says:
    5 years ago

    ஒருதலைப்பட்சமான கட்டுரை. பொறுப்புகளை தூக்கி சாதாரண மனிதன் தலையில் கட்டிவிட்டு புகழை மட்டும் தலையில் அணிந்து கொள்வது வலதுசாரிகளுக்கு கைவந்த கலை. கட்டுரை ஆசிரியரும் அதே ரகம் போல. இதில் அரசின் அப்பட்டமான தோல்விகள் குறித்து எழுத மறுப்பது கருத்து நேர்மையின் தோல்வியை காட்டுகிறது. சரி விடுங்கள், வலதுசாரிகளிடம் கருத்து நேர்மையை எதிர்பார்க்கும் நான் தான் முட்டாள்.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

August 27, 2020
பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள்

January 1, 2021
முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம்  வெறும் கனவு தான்!

முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம் வெறும் கனவு தான்!

October 27, 2021
‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

January 14, 2021
பாரதிய கல்வி (பகுதி – 5)

பாரதிய கல்வி (பகுதி – 5)

11
பாரதிய கல்வி (பகுதி-1)

பாரதிய கல்வி (பகுதி-1)

10
ஊர் கூடித் தேரிழுப்போம்..

ஊர் கூடித் தேரிழுப்போம்..

10
தாகம் தணிக்குமா கானல்நீர்

தாகம் தணிக்குமா கானல்நீர்

7
ஜெய் ஸ்ரீராம் !

ஜெய் ஸ்ரீராம் !

January 22, 2024
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023

Recent News

ஜெய் ஸ்ரீராம் !

ஜெய் ஸ்ரீராம் !

January 22, 2024
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023
சஞ்சிகை108

© 2022 sanjigai 108

Navigate Site

  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

© 2022 sanjigai 108