பாரத நாட்டை வழிநடத்த இந்த 75ஆண்டுகளில் கிடைத்த ஓர் ஒப்பற்ற மைந்தனை ஈன்றெடுத்த தேவதை உயிர் நீத்தார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் தனது இழப்பை எந்த விதத்திலும்
தேசீய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதவில்லை. பொது அஞ்சலி, இறுதி மரியாதை போன்ற நிகழ்ச்சிகள் இல்லை .
சாமானிய இந்தியர் ஒருவரின் இறுதி யாத்திரையாகவே நடந்தது.
தாயின் சடலத்தைச் சுமந்த சாதாரண தனயன் அவர்.
மேலை நாடுகள் உறக்கத்திலிருந்து எழும் முன்பே இங்கு ஒரு மகன் நூறாண்டு வாழ்ந்த தன் தாயை இறைவனின் பாதங்களில் இளைப்பாறச் செய்துவிட்டு தனது சேவையைத் தொடரச் சென்றுவிட்டார்.
குழந்தைப் பிறப்பு எவ்வளவு துரிதமாக நடக்குமோ அவ்வளவு துரிதமாக நடந்துவிட்டது அந்தத் தாயின் இறுதிச் சடங்கு.
அது தான் இந்த தர்மத்தின் சிறப்பு.
இந்த சமயத்தில் இதேபோன்ற மற்றொரு நிகழ்வை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.
சமீபத்தில் உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாட்டில் 95 வயதான பெண்மணி ஒருவர் மூப்பின் காரணமாக கடந்த செப்.8ம் தேதி இறந்தார்.சரியாக 11 நாட்கள் கழித்து தான் செப்.19அன்று ஈமக்கிரியை நடந்தது.
அதற்கான செலவு மட்டுமே £2.6 பில்லியன்கள்.

இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் கண்டவர்கள் மட்டும் 4.1பில்லியன் மக்கள்.
எழுபதாண்டுகள் அரசாண்ட ராணியின் வாழ்க்கைப் பயணம் இப்படியாக முடிவுற்றது.
தேசமே இரண்டு வாரங்கள் ஸ்தம்பித்தது.
சுமார் 14.5 மில்லியன் மக்கள் அதாவது ஐந்தில் ஒருவர் ஏழ்மையில் வாழும் பிரிட்டன் நாட்டில் 8.1மில்லியன் மக்கள் பணிக்குச் செல்பவர்கள்,
4.3 மில்லியன் குழந்தைகள்,2.1 மில்லியன் ஓய்வூதியம் பெறுபவர்கள்.
இந்த நிலையில் இப்படி ஒரு ஆடம்பர இறுதி அஞ்சலி தேவையா?
எவ்வளவு அலட்சியமிருந்தால்பொதுமக்களுக்கு இப்படி ஒரு கொடுமையைச் செய்யமுடியும் ?
இவர்கள் தான் மிகத் திமிராக ஜனநாயக மாண்புகள் பற்றி பாரத தேசத்திற்கு அறிவுரை வழங்குபவர்கள்.
மொழிபெயர்ப்பு ஆசிரியர்: ஸ்ரீப்ரியா இராம்குமார்














