2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்தியாவில் சிறுபான்மையினரின் வளர்ச்சி கனிசமாக கூடியுள்ளது. ஆனால் ஆந்திர பிரததேசத்தில் மட்டும் கிறிஸ்துவ மக்கள் தொகை எண்ணிக்கை 1971 லிருந்து 2011 வரை ஒரு ஆய்வு செய்த போது, குறைந்து காட்டப்பட்டுள்ளது. இதற்கு மாறாக தாழ்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. இதில் நடந்துள்ள மோசடி பற்றிய ஒரு ஆய்வு கட்டுரையாகும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ரகு ராஜூ இது சம்பந்தமாக பிரதம மந்திரி அலுவலக அமைச்சருக்கு எழுதிய கடிதம் மிகப் பெரிய விவாதத்திற்கு வந்துள்ளது. .
பல ஆண்டுகளாகவே ஆந்திர மாநிலத்தில், இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு பெரிய அளவில் மத மற்றங்கள் நடைபெற்று வருகின்றன. ஆந்திர மாநிலத்தில் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாறுவதைக் கட்டுப்படுத்தவோ, அல்லது கண்காணிக்கவோ எந்த சட்டமும் கிடையாது, மத மாற்றத்தை பதிவு செய்ய கட்டாய ஏற்பாடும் கிடையாது. இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தில் இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவத்திற்கு மாற்றப்பட்ட பெரும்பாலான மாற்றங்கள் எந்த உத்தியோகபூர்வ பதிவுகளிலும் கிடையாது. எஸ்.சி மற்றும் கிறிஸ்டியன் என்ற சொல் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன் படுத்தப்பட்டு அரசின் நிதி சுரண்டப்படுவதால் , உண்மையில் எஸ்.சி. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்பட்ட விவரங்களால் இந்த சுரண்டல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1971 க்கும் 2011க்கும் இடையில் ஆந்திர மாநில மக்கள் தொகை 78.43 சதவீதம் உயரந்துள்ளது. இந்நிலையில் இந்த இடைப்பட்ட நாற்பது ஆண்டுகாலத்தில் கிறிஸ்துவர்களின் மக்கள் தொகையின் எண்ணிக்கை எதிர் திசையில் சென்று – 54.13 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த செய்தி மிகவும் ஆச்சிரியத்தை அளிக்கிறது. 1971-ல் 14.87 லட்சமாக இருந்த கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 1981-ல் 14.33 லட்சமாகவும், 2011-ல் வெறும் 6.82 லட்சமாக குறைந்துள்ளது. 1971-ல் 4.39 சதவீதமாக இருந்த கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை , 1981-ல் 2.68 சதவீதமாகவும், 2011-ல் 1.34 சதவீதமாகவும் மாறியுள்ளது. அதாவது 2001-ல் 11,81,917 என இருந்த கிறிஸ்துவர்கள், 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் 11,29,784 என குறித்துள்ளார்கள். எல்லா மாநிலத்திலும் சிறுபான்மையினரின் மக்கள் தொகை கூடுதலாக இருக்கும் போது ஆந்திராவில் மட்டும் கிறிஸ்துவர்களின் மக்கள் தொகை குறைவதற்குறிய காரணத்தை ஏசுவே விளக்க வேண்டும்.
ஆந்திராவின் 5 மாவட்டங்களுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் ஆந்திராவின் மறைந்துபோன கிறிஸ்தவர்களின் பிரச்சினையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகின்றன. குண்டூரில் ஒரு மாவட்டத்தில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1971 ல் 4.15 லட்சத்திலிருந்து 2011 ல் வெறும் 0.89 லட்சமாக குறைந்துள்ளது. அனைத்து கிறிஸ்தவர்களும் எங்கே மறைந்துவிட்டார்கள்? இது ஒரு அபத்தமான சூழ்நிலைக்கு வழிவகுத்தது, ஒரு கிராமத்தில் பூஜ்ஜிய கிறிஸ்தவர்கள் உள்ளனர், ஆனால் அதே கிராமத்தில் 11 தேவாலயங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, மடுலபர்வ கிராமம், ரெட்டிகுடம் மண்டல். அதே போல் கிருஷ்ணா மாவட்டம். பிரகாசம் மாவட்டத்தின் பெடா அரவிடு மண்டலத்தில், 33 போதகர்களுக்கு ரூ. 5,000 அரசு உதவி தொகை வழங்கியது. ஆனால் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி முழு வருவாய் பிரிவிலும் வெறும் 16 கிறிஸ்தவர்கள் உள்ளனர். வெறும் 16 கிறிஸ்துவர்கள் உள்ள பகுதியில் 33 போதகர்கள் எவ்வாறு வந்தார்கள் என்ற கதையை ஏசுவே விளக்க முற்பட வேண்டும்
குண்டூர் மாவட்டத்திற்கான தரவு இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. 1961 ஆம் ஆண்டில், 5.24% மக்கள் பட்டியல் சாதியினரும், 13.40% கிறிஸ்தவர்கள் என்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் காட்டப்பட்டுள்ளது.. 2011 க்குள், எஸ்சி எண்ணிக்கை 19.59% ஆக உயர்ந்துள்ளது, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.84% ஆகக் குறைந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளில் இடஒதுக்கீடு, பரிந்துரைக்கப்பட்ட பதவிகள், வேலைகள், கல்வி வாய்ப்புகள், உதவித்தொகை, விடுதிகள், வீட்டுவசதி போன்ற பல வாய்ப்புகளையும், வசதிகளையும் பெற கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள், இந்து-எஸ்சி சாதி சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர் .எஸ்.சி.க்களுக்கு அரசியலமைப்பு வழங்கிய சிறப்பு வசதிகளை இது முற்றிலும் தவறாக பயன்படுத்தப்படுகிறது.
தகவல் உரிமை பெறும் சட்டத்தின் மூலம் , சந்திரண்ண கிறிஸ்மஸ் கானுங்கா ( Chandranna Christmas Kanuka ) என்ற திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு , அரசாங்க அதிகாரிகள் கொடுத்த பதில், தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் கிறிஸ்துவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். ஆகவே இந்த திட்டத்தில் அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கிடைக்கும் படி ஆணை பிறபிக்கப்பட்டது என்றார். 2019 சட்ட மன்ற தேர்தலின் போது, ஒருங்கிணைந்த பேராயர்களின் அமைப்பின் கூட்டம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் Jeelugumilli கிராமத்தில் நடந்தது. மேற்படி கூட்டத்தில் ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தில் ஐந்து லட்சம் பேராயர்கள் பணியாற்றுவதாகவும், சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான கிறிஸ்துவர்கள் வாழ்வதாகவும் மேற்படி அமைப்பின் செயலாளர் கே.ராஜேந்திர பிரசாத் கூறியது சற்றே ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். இரண்டு கோடி கிறிஸ்துவர்கள் வாழ்வதாக கூறும் கிறிஸ்துவர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பின் எவ்வாறு 6.82 லட்சம் மட்டுமே காட்டுப்பட்டுள்ளது என்பதற்கு அரசும் விளக்கம் கொடுக்கவில்லை. ஆசிர்வதிக்கும் ஏசுவும் இது பற்றி வாய் திறக்கவில்லை.
கோவிட் 19 க்கு பேரழிவு நிவாரண நிதியாக ஆந்திர பிரதேச அரசு ரூ34 கோடியை தலைக்கு ரூ5000 வீதம் 31,017 அர்ச்சகர்களுக்கும், 7,000 இமாம் மற்றும் மௌலிகளுக்கும், 29,841 பேராயர்களுக்கும் வழங்கியது. இதில் மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், 1.39 சதவீதம் மட்டுமே உள்ள கிறிஸ்துவர்களுக்கு , 43.99 சதவீத பேராயர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதை போலவே, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட நிவராணத் தொகையை , இந்து எஸ்.சி என சான்றிதழ் பெற்று, இதே 29,841 பேராயர்களும் நிவாரணத் தொகையை பெற்றுள்ளார்கள். இது சம்பந்தமாக சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம் என்ற அமைப்பு தாழ்த்தப்பட்ட மக்களின் தேசிய அமைப்பிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி புகாரில், பேரிடார் நிவாரண நிதி பெற்ற பேராயர்களில் 58.14 சதவீதம் பேர்கள் எஸ்.சி. சான்றிதழ்கள் வைத்திருப்பதாகவும், 13.37 சதவீதம் பேராயர்கள் பிற்பட்ட வகுப்பு சான்றிதழ் வைத்திருப்பவர்கள் என ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்கள்.
76 கிறிஸ்துவ தேவாலயங்களை புனரமைக்கவும், மராமத்து பணிகளை நடத்துவும் ரூ 5 லட்சம் ஒவ்வொரு கிறிஸ்துவ தேவாலயங்களுக்கும் நிதியாக அரசு வழங்கியது. 2014 முதல் 2019 வரை 817 கிறிஸ்துவ தேவாலயங்களுக்கும் புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. மேற்படி கிறிஸ்துவ தேவாலயங்கள் அனைத்தும் எஸ்.சி. மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள தேவாலயங்களாகும். இது மறைமுகமாக தாழ்த்தப்பட்ட இந்து மக்களை மத மாற்றம் செய்ய ஒரு குறுக்கு வழியாகும். இந்த குறுக்கு வழியை அரசே செய்வது தான் கேள்விக்குறிய விஷயமாகும். இத்தோடு மட்டுமில்லாமல், வெளிநாட்டு கிறிஸ்துவ என்.ஜி.ஓ மூலமாக கிடைக்கும் கோடிக்கணக்கான நிதியை கொண்டு, கிறிஸ்துவ சுவிசேஷ லாபிகள் , வெட்ககேடான முறையில் மத மாற்றம் செய்வதும், உள்ளுர் கிறிஸ்துவ மத போதகர்களின் கூட்டு முயற்சியால், ஆந்திராவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை நசுக்கி அழிவின் விளம்பிற்கு தள்ளுகின்றன என சட்ட உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.













