• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
சஞ்சிகை108
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
சஞ்சிகை108
No Result
View All Result
Home இலக்கியம்

இனிமே ஹோம்ஸ்கூல்தான்!-1

B.R.மகாதேவன் by B.R.மகாதேவன்
August 15, 2021
in இலக்கியம், கதை
1
இனிமே ஹோம்ஸ்கூல்தான்!-1
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare in Whatsapp

ஹோம் ஸ்கூலிங்ல உங்களைச் சேக்கப்போறேன்…

நான் சொன்னதற்கு, யாரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை. அதோடு, எதிர்பார்த்த சத்தத்துடன் என் குரல் ஒலிக்கவில்லை என்பது எனக்கே சற்று அதிர்ச்சியாக இருந்தது.

மீண்டும் உரத்த குரலில் சொன்னேன்.

இனிமே ஹோம்ஸ்கூல்தான். முடிவு பண்ணிட்டேன்.

மகன் தடையாக வந்த எதிரிகளையெல்லாம் சுட்டு வீழ்த்தியபடி அடுத்த லெவலுக்கு முன்னேறிக் கொண்டிருந்தான்.  மனைவி லேப் டாப்பில் அலுவலக வேலையில் மூழ்கியிருந்தாள். கடைக்குட்டி பிருந்தாவனத்தில் தன் ராதையுடனும் கிருஷ்ணனுடனும் பேசிக் கொண்டிருந்தாள். 

இனிமே ஸ்கூலுக்குப் போகவேண்டாம். வீட்லயே படிச்சா போதும், என்று மகனின் தொடையில் தட்டிச் சொன்னேன். 

செல் போனில் மும்மரமாகத் தலை கவிந்திருந்தவன் லேசாகத் தலையை நிமிர்த்தி, ”தம்ப்ஸ் அப்’ சிக்னல் காட்டிவிட்டு மீண்டும் துப்பாக்கியைக் கையில் எடுத்தான். 

மனைவியின் தோளில் தட்டிச் சொன்னேன்.

உனக்குப் பிடிச்சிருந்தா செஞ்சுக்கோ டார்லிங் என்றாள் லேப் டாப்பில் இருந்து தலையை உயர்த்தாமலேயே.

கிருஷ்ணனிடம் காளிங்கனைப் பற்றி, மகள் புகார் சொல்லிக் கொண்டிருந்தாள்.

டி.வி. அதுபாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தது.

பைரவ் மட்டும் நான் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு புன்னகையைச் சிந்தி அதற்கு நன்றி சொன்னேன். வாலை ஆட்டி பதிலுக்கு நன்றி சொன்னது.

பிரின்சிபால் கிட்ட நாளைக்குப் பேசப்போறேன். ஹோம்ஸ்கூல்தான் இனிமே. நீயும் வா. அப்பத்தான் டி.சி. தருவார். – மனைவியிடம் சொன்னேன்.

அலுவலக வேலையில் இருந்து லேசாக கவனம் திரும்பிய அவள் காதில் டி.சி. என்பது மட்டும் விழுந்ததுபோல. லேசாகக் குழம்பியபடியே திரும்பிப் பார்த்தாள்.

ஹோம்ஸ்கூல்தான் இனிமே. டி.சி. வாங்கணும்.

ஹோம் ஸ்கூலா… யாருக்கு..?

ம்… எனக்குத்தான்.

ஓ… நல்ல விஷயம். இப்பயாவது நாலு விஷயம் ஒழுங்கா கத்துக்கோ.  சொல்லித் தர்றேன்.  

நீயும்தான் சொல்லித் தந்தாகணும். நாளைக்கு ஸ்கூலுக்குப் போகணும். ஆபீஸ்ல ஏதாவது முக்கியமான வேலை இருக்கா உனக்கு நாளைக்கு.

எங்க ஆபீஸ்ல எல்லா நாளுமே முக்கியமான வேலைதான்.

அது வேலை செய்யறவங்களுக்கு. நான் உன்னைக் கேட்டேன்.

எங்க ஆபீஸ்… 

(ஏதோ சொல்ல வந்தவள் நிறுத்திக் கொண்டு), சரி என்ன விஷயம்? என்றாள்.

ரெண்டு பேருக்கும் நாளைக்கு டி.சி. வாங்கப் போறேன். போறேன் இல்லை… போறோம். குழந்தைங்களோட குழந்தைப் பருவத்தை அவங்களுக்குத் திருப்பித் தந்துடணும். எந்தவொரு விஷயத்தையும் அவங்களாவே கத்துக்கட்டும். நாம எதையும் திணிக்கவேண்டாம். இனிமே ஸ்கூலுக்கே போகவேண்டாம். நான் சொல்லித் தர்றேன். நீயும் சொல்லிக் கொடு.

மனைவி லேப் டாப்பை மூடினாள். தள்ளியிருந்த ரிமோட்டை எடுத்து டி.வி.யை அணைத்தாள். 

வருண்…

என்னம்மா- தலையை நிமிராமலேயே  கேட்டான்.

போனை எடுப்பா. 108க்கு இல்லைன்னா 100க்கு போன் போடு.

நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தான். பிறகு என்னைப் பார்த்துச் சிரித்தான்.

இன்னிக்கு என்ன புதுக் கதை?

உங்க அப்பாவுக்குக் கதைக்கா பஞ்சம்.

நீங்க ரெண்டு பேரும் ஓகே சொல்லிட்டீங்களே என்றேன்.

எதுக்கு என்றனர் இருவரும் ஒரே நேரத்தில்.

அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் தெளிவா அழுத்தமா இனிமே ஹோம் ஸ்கூல் தான்னு சொன்னேன். நீ தம்ஸ் அப் காட்டின. உங்க அம்மாவும், எனக்குப் பிடிச்சிருந்தா செஞ்சுக்கோன்னு சொல்லியாச்சு.

செல்லம்… நீ மொதல்ல அந்த போனை எடு. எந்தப் பேச்சுக்கும் இனி இடமே இல்லை.

நானும் அதையேதான் சொல்றேன். இனி பேச்சுக்கே இடமில்லை. ஒன்லி ஆக்ஷன். நாளைல இருந்து நீங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்குப் போகவேண்டாம்.

ஹையா ஜாலி…

ஹோம் ஸ்கூல்தான் இனிமே.

ஹோம் ஸ்கூலா, அப்படின்னா… ஹோம்லயே ட்யூஷன் எடுக்கப் போறியா.

அப்படி இல்லை. ஆனா அப்படித்தான்.

புரியலையே.

அதாவது, நான் தான் இனிமே உங்களுக்குச் சொல்லித் தரப்போறேன்.

பையனின் உற்சாகம் சற்று வடிந்தது. 

அம்மாவும் சொல்லித் தருவாங்க. செடி, கொடி, மரம், பஸ், ரயில், ஆடு, மாடு எல்லாமே உனக்குச் சொல்லித் தரும். நீ இந்த உலகத்துல இருந்து கத்துக்கப் போற.

ஆடும் மாடும் சொல்லிக் கொடுத்தா கொஸ்டின் பேப்பர் யார்ப்பா திருத்துவாங்க?

டெஸ்டே கிடையாதுடா செல்லம்.

டெஸ்டே கிடையாதா? அப்பா அடுத்த க்ளாஸுக்கு எப்படிப் போவேன்.

அடுத்த க்ளாஸ்னு எதுவும் கிடையாது. இப்போ நீ ஏழாங்கிளாஸ் படிக்கற இல்லையா. எட்டு, ஒம்போது படிக்கவேண்டாம். பத்தாங் கிளாஸ், 12ங்கிளாஸ் எல்லாம் ப்ரைவேட்டா எழுதிக்கலாம். ஹோம் ஸ்கூல். அதாவது இனிமே வீட்ல இருந்தே படிச்சுக்கலாம்.

வீட்ல இருந்தே படிச்சா வேலையையும் வீட்ல இருந்தேதான் பாக்கவேண்டியிருக்கும். பசுக்கள், காளைகள், எருமைகள் வாங்க பிளான் இருக்கா -லேப் டாப்பை அதன் பையில் வைத்து வெல்க்ரோவை இழுத்து மூடினாள்.

அது ரொம்ப நல்ல வேலைதான். கிருஷ்ண பரமாத்மாவோட தொழில்.

சரிடா செல்லம். அப்பா கூட கதை பேசிட்டே இரு. நான் டிஃபன் ரெடி பண்ணிட்டு வர்றேன்.

டிஃபனெல்லாம் நானே செஞ்சு ஹாட் பேக்ல வெச்சிருக்கேன்.

சூப்பர் டார்லிங். அப்போ இன்னிக்கு ராத்திரி இந்த டிராமாதானா. வருண், அப்பா பக்கா பிளானோடதான் இருக்கார் போல இருக்கு. சீக்கிரம் சாப்பிட்டுட்டு போய் தூங்கற வழியைப் பாரு. 

மனைவி எழுந்து கை அலம்பச் சென்றாள். மகனும் கூடவே சென்றான்.  

நான் ரொம்ப முக்கியமான விஷயம் பேசிட்டிருக்கேன்.

தாராளமா பேசுங்க. பேசி முடிச்சதும் கூப்பிடுங்க வந்துடறோம்.

யார் கிட்ட பேச?

உங்க செல்ல மகள் இருக்காளே. அவ கிட்ட பேசுங்க. இல்லைன்னா கிருஷ்ணர் ராதை கிட்ட பேசுங்க.

அவங்க கிட்டயெல்லாம் பேசியாச்சு. அவங்க ஓகேயும் சொல்லியாச்சு. 

ஓகே சொல்லியாச்சா… எப்போ? – கிச்சனிலிருந்தபடியே கேட்டாள்.

நேத்திக்கு ஸ்டார் பார்த்துட்டு இருந்தப்போ சொன்னேன். என் குழந்தைங்களுக்கு ஹோம் ஸ்கூல் அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சேன். ஒரு நட்சத்திரம் எரிஞ்சு விழுந்து ஓகேன்னு ஆசீர்வாதம்  பண்ணிச்சு. சொன்னா நம்பமாட்ட. குட்டி கிட்டக் கேட்டுப் பாரு. கேஷுவலா அவ கிட்ட ஹோம் ஸ்கூல் பத்திப் பேச வாயெடுத்தேன். கரெக்டா அப்ப பார்த்து நட்சத்திரமும் வந்து விழுந்துச்சு. அப்படித்தானடா செல்லாம். 

குழந்தை மலங்க மலங்க முழித்தது.

பல்லியும் வலது பக்கம் நின்னு கத்தியிருக்குமே – டைனிங் டேபிளில் அனைவருக்கும் தட்டுக்களை எடுத்துவைத்தபடியே மனைவி கேட்டாள்.

ஆமாம் அதுவும் நடந்திருச்சு.

அப்பா வீடுன்னு ஒண்ணு இருந்தா அதுல சில பல பல்லிகள் இருக்கத்தான் செய்யும். அது தன்னோட குடும்பத்தைச் சேர்ந்தவங்களைக் கூப்பிடவோ இரையப் பார்த்ததும் மகிழ்ச்சிலயோ ஏதாவது சத்தம் போடும். நட்சத்திரங்கறது அப்பப்ப எரிஞ்சு விழத்தான் செய்யும்.

அதெல்லாம் இல்லை. நான் ஹோம் ஸ்கூல் பத்தி நினைக்கறப்ப மட்டும் எப்படி சரியா இதெல்லாம் நடக்குது. அப்படின்னா அமானுட, தேவ, தெய்வ சக்திகள் எல்லாம் எனக்கு ஆதரவா இருக்குன்னுத்தான் அர்த்தம்.

வாஷ்பேஸினில் முகத்தையும் கையையும் நன்கு அலம்பிக் கொண்டேன். மகளுக்கும் அலம்பிவிட்டேன். பைரவுக்கு தட்டில் பாலும் பிஸ்கெட்டும் வைத்துவிட்டு வந்து உட்கார்ந்தாள்.

மனைவி அனைவருக்கும் இட்லியை எடுத்து வைத்து, சாம்பார், சட்னி ஊற்றினாள்.

குழந்தைங்களுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தேன்.

நீ பாட்டுக்கு ஹோம் ஸ்கூல்னு கூலா சொல்ற. கல்விக்கான உரிமை பற்றின சட்டத்துல ஸ்டேட்டுக்கு நிறைய பொறுப்பு தரப்பட்டிருக்கு. குழந்தைங்களோட கல்வியைப் பறிச்சா களிதான் தெரியும்ல என்றாள் மனைவி. 

அதெல்லாம் இல்லை. நம்ம நாட்டு சட்டத்துல ஹோம் ஸ்கூல் தப்பு ஒண்ணும் இல்லை. அதோட நான் கல்வியைப் பறிக்கலையே. தரத்தான போறேன். இப்ப ஸ்கூல்ல கல்வி எங்க இருக்கு. வெறும் மனப்பாட கோச்சிங் தான இருக்கு.

உன்னோட ரொமாண்டிக் கற்பனைகள்ல இருந்து வெளிய வா டார்லிங். இது ரொம்பப் பெரிய முடிவு.

அதனாலதான் உங்களோட சப்போர்ட் வேணும்னு கேக்கறேன்.

குழந்தைங்களை கிணத்துல தூக்கிப் போடறேன். வா, வந்து ஒரு கை கொடுன்னு கேக்கற. எப்படி உதவ முடியும்?

உண்மையிலயே நான் கிணத்துல கெடக்கற குழந்தைங்களை மேல தான் தூக்கிவிடறேன்.

இங்க பாரு… வேதி உரம் இல்லாத விவசாயம், மூலிகை மருத்துவம், மாற்றுக் கல்வி, கிராம வாழ்க்கை, மாட்டுவண்டி – சைக்கிள் பயணம் இதெல்லாம் ஒருவகையான ரொமாண்டிக் ஹம்பக். அதெல்லாம் கதையா கற்பனையா எழுதலாம். படிக்கலாம். நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராதுப்பா.

நீ என்னடா சொல்ற? அந்த ட்ரேயை இங்க கொஞ்சம் நகர்த்து.

நகர்த்தியபடியே மகன் சொன்னான்: எனக்கு ஸ்கூல் இல்லைன்னா ஜாலிதான். ஆனா நீங்க சொல்லிக் கொடுப்பேன்னு சொல்றீங்களே… அதான் பயமா இருக்கு.

இல்லை. இது ஸ்கூல் பாடங்களைச் சொல்லித் தர்றேனே அது மாதிரி இல்லை. அது தப்புன்னு புரிஞ்சிருச்சு. என்ன, நான் ஒரு விஷயத்தை நாலைஞ்சு தடவை சொல்லியும் செய்யலைன்னா கோபம் வந்துரும். ஆனா ஹோம் ஸ்கூலிங்க்ல நிச்சயம் கோபமே படமாட்டேன். ஜூ, பார்க், பீச், கோவில்னு ஊர் சுத்திட்டே இருக்கலாம்.

ஜூவுக்குப் போனா ஒவ்வொரு பறவையைப் பத்தியும் தமிழ்ல ஐஞ்சு வாக்கியம் இங்கிலீஸ்ல பத்து வாக்கியம் ஹிந்தில நாலு வாக்கியம்னு மனப்பாடம் பண்ணச் சொல்லுவ.

மாட்டேன்.

போய்ட்டு வந்ததும் எழுதச் சொல்லுவ.

மாட்டேன்.

என்ன மாட்டேன்?

ஒண்ணுமே செய்யச் சொல்ல மாட்டேன்.

வெறும்னே ஜூவுக்குக் கூட்டிட்டுப் போவீங்களா?

ஆமாம். நீ வேடிக்கை பார்த்துக்கோ. வேடிக்கை மட்டுமே பார்த்துக்கோ. நான் எதுவுமே செய்யச் சொல்ல மாட்டேன்.

எந்த இடத்துக்குப் போனாலும்.

ஆமாம். பீச், பார்க், ஜூ, கோவில்னு எங்க போனாலும் நீயாவே ஏதாவது கேட்டா மட்டும் தான் நான் பேசுவேன். நானா எதையும் செய்யச் சொல்லவே மாட்டேன்.

அப்போ நான் எப்படிப் படிக்க?

நீ எதையுமே படிக்கவேண்டாம். புரிஞ்சுக்கோ போதும்.

அப்படின்னா?

வெல்… நாம ஒரு வாரம் சுத்தும்போது நீயே புரிஞ்சுப்ப.

அப்போ நீ வேலைக்குப் போகப் போறதில்லையா..? -இட்லியைத் தட்டில் வைத்தபடியே கேட்டாள் மனைவி.

போவேனே.

அப்படின்னா இவங்களை ஜூ, பீச், கோவிலுக்கு யார் கூட்டிட்டுப் போவாங்க?

நான் தான்.

என்ன குழப்பற?

ஒரு குழப்பமும் இல்லை. சனி ஞாயிறுல போவோம்.

அப்போ மீதி நாள்ல படிப்பு சுத்தமா வட்ட பூஜ்ஜியம் தானா?

தினமும் ஐஞ்சாறு மணி நேரம் படிப்பாங்களே. அது போதாதா?

என்ன சொல்ற… வீக் டேய்ஸ்ல நீ ஆபீஸுக்குப் போயிடுவ. இவங்களுக்கு யார் சொல்லிக் கொடுப்பாங்க? என்னால அரை நிமிஷம், அரை நோடி கூட இவங்க கூட உட்காரமுடியாது.

காலைல ஆபீஸ் போறதுக்கு முன்னால ரெண்டு மணி நேரம்… சாயந்திரம் ஆபீஸ்ல இருந்து வந்ததுக்கு அப்பறம் ரெண்டு மணி நேரம்  இவங்களுக்குச் சொல்லிக் கொடுப்பேன்.

9 மணிக்கு நீ ஆபீஸ் புறப்பட்டாகணும் தெரியும்ல.

ஆமாம். காலைலை 5.30க்கு எழுந்திருச்சிடுவோம்.

அப்பா 5.30ன்னா அது ராத்திரிப்பா…

கண்ணா அதிகாலை, காலை, பகல், நண்பகல், மாலை, பின் மாலை, இரவு, நள்ளிரவுன்னு ஏகப்பட்டது இருக்கு. 5.30 அப்படிங்கறது அதிகாலை.

சரி… அப்படின்னே வெச்சுக்கோ. அந்த ஆதிகாலைல எப்படி எந்திரிக்கறது?

ராத்திரி 9.00 மணிக்கெல்லாம் தூங்கினா காலைலை 5.30க்கு எந்திரிக்கறது ரொம்ப ஈஸிதான். அதுவும் போக அதிகாலைல எந்திரிச்சு பல் தேய்ச்சு குளிச்சு முடிச்சிட்டு பார்க்ல நடந்தா எப்படி இருக்கும் தெரியுமா? இந்த உலகத்துல ரொம்ப அழகான பருவம் குழந்தைப் பருவம். மிகவும் அசிங்கமா இருக்கற விலங்கு கூட குழந்தையா இருக்கும்போது அம்சமா இருக்கும். பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கும்.

இப்ப இதை எதுக்கு சொல்ற?

ஒரு நாளின் குழந்தைப் பருவம் அதிகாலை. நேரம் ஆக ஆக வெளிறி, முத்தி, மூப்படைஞ்சு போகற நாளின் இனிமையான குழந்தைப் பருவங்கறது அதிகாலைதான்.  இந்த ஒட்டு மொத்த உலகமுமே அந்த அதிகாலைல தான் அதி ரம்யமா இருக்கும். ஒரு நாளை நாலு யுகமா பிரிச்சா அதுல அதிகாலைங்கறது சத்திய யுகம் மாதிரி.

(என் பேச்சை இடைமறித்து) சரி… நாங்க தினமும் காலைல எந்திரிச்சாகணும். அப்படித்தான.

ஆமாண்டா செல்லம். சிலர் வந்து எக்ஸாட்டிக் லொகேஷன் அது இதுன்னு தேடி அலைவாய்ங்க. இருக்கற இடத்தையே அதிகாலைலை எந்திரிச்சுப் பார்த்தா எல்லா ஊருமே எக்ஸாட்டிக் லொகேஷன் தான்.

சரி அதிகாலைல எந்திரிச்சு…

ஒரு ஆறு மணிக்கெல்லாம் பார்குக்குப் போவோம். யோகா, மெடிடேஷன், சூரிய நமஸ்காரம் பண்ணுவோம். அப்பறம் பார்க்ல அப்படியே நடப்போம். எட்டு மணி வரை பேசுவோம். ஒரு நாள் சயின்ஸ் பத்தி பேசுவோம். ஒரு நாள் ஹிஸ்டரிபத்திப் பேசுவோம். ஒரு நாள் புவியியல் பத்திப் பேசுவோம். ஒரு நாள் தமிழ் பத்தி பேசுவோம். ஒரு நாள் இங்கிலீஷ் பேசுவோம். எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்ததும் நான் சாப்பிட்டுட்டு 9 மணிக்கு ஆபீஸ் புறப்பட்டுப் போயிருவேன். சாயந்திரம் ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துருவேன். ஆறரைல இருந்து எட்டு வரை மறுபடியும் பேசுவோம். எட்டு மணிக்கு சாப்பிட்டு 9 மணிக்கெல்லாம் தூங்கிருவோம். இதுதான் டெய்லி ரொட்டீன். சனி, ஞாயிறுல ஊர் சுத்துவோம்.

தொடரும்…..

Previous Post

போற்றுதலுக்குரிய பெண் விடுதலைப் போராட்ட வீரர்கள்

Next Post

ஆகஸ்ட் 15: சிறப்பாக கொண்டாட மற்றுமோர் காரணம்

B.R.மகாதேவன்

B.R.மகாதேவன்

Next Post
ஆகஸ்ட் 15: சிறப்பாக கொண்டாட மற்றுமோர் காரணம்

ஆகஸ்ட் 15: சிறப்பாக கொண்டாட மற்றுமோர் காரணம்

Comments 1

  1. R.UMA BHARATHY says:
    5 years ago

    மஹாதேவன் அவர்களின் கதை துவக்கமே எதிர்பார்ப்பு ஏற்படுத்துகிறது. சிறுகதை என்று நினைத்து கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன்…ஆனால் தொடரும் என்று கண்டவுடன் மனம் ஏங்க ஆரம்பித்து விட்டது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

August 27, 2020
பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள்

January 1, 2021
முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம்  வெறும் கனவு தான்!

முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம் வெறும் கனவு தான்!

October 27, 2021
‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

January 14, 2021
பாரதிய கல்வி (பகுதி – 5)

பாரதிய கல்வி (பகுதி – 5)

11
பாரதிய கல்வி (பகுதி-1)

பாரதிய கல்வி (பகுதி-1)

10
ஊர் கூடித் தேரிழுப்போம்..

ஊர் கூடித் தேரிழுப்போம்..

10
தாகம் தணிக்குமா கானல்நீர்

தாகம் தணிக்குமா கானல்நீர்

7
ஜெய் ஸ்ரீராம் !

ஜெய் ஸ்ரீராம் !

January 22, 2024
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023

Recent News

ஜெய் ஸ்ரீராம் !

ஜெய் ஸ்ரீராம் !

January 22, 2024
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023
சஞ்சிகை108

© 2022 sanjigai 108

Navigate Site

  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

© 2022 sanjigai 108